வாகனத்தில் ஏறி 104 கிலோமீற்றர் பயணம் செய்த காட்டுக் கரடி…!!

Read Time:1 Minute, 28 Second

140681bear2காட்டிலிருந்த கரடியொன்று வாகனமொன்றில் ஏறி 104 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

இக்கரடி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த குப்பை அகற்றும் வாகனமொன்றின் பின் பகுதியில் ஏறிக்கொண்டிருந்தது.

இதனை அறியாத ஊழியர்கள் மேற்படி வாகனத்தை செலுத்திச் சென்றனர். 65 மைல் (சுமார் 104 கிலோமீற்றர்) தூரத்திலுள்ள குப்பைக்கிடங்கு ஒன்றை மேற்படி வாகனம் அடைந்த பின்னர் அவ்வாகனத்தில் கரடியொன்று இருந்தமை தெரியவந்தது, வாகனத்திலிருந்து தப்பிய இக்கரடி குப்பைத் தொட்டிக்கு அருகிலுள்ள வீதிகளில் சுற்றித் திரிந்தது.

பாரிய கரடியொன்று நகரில் திரிவதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அதையடுத்து, மேற்படி கரடி வன ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 8.2 ரிக்டர் அளவிற்கு இமயமலையில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரிக்கை..!!
Next post வடகொரியாவில் அணு பரிசோதனைக் கூடம் அருகே நிலநடுக்கம்…!!