ஜனாதிபதியின் செயற்திட்டங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் பாராட்டு..!!

Read Time:4 Minute, 53 Second

3இலங்கையில் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழித்து ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களைப் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் நேற்று கொழும்பில் பெரிதும் பாராட்டினார்.

இலங்கையை உலகின் சிறந்த நாடாக முன்னேற்ற வேண்டியதன் அவசியத்தை உண்மையாகக் கொண்டிருப்பவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாம் அதி கௌரவத்துடன் நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் இலங்கையின் உணவுப் பாதுகாப்பின் நிமித்தம் அரிசி, சீனி உற்பத்திக்கு தேவையான உதவிகளை வழங்கவும், பால் மற்றும் சீமெந்து கைத்தொழிலை மேம்படுத் துவதற்கு அவசிய உதவிகளை நல்கவும் இணக்கம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், தமது நாட்டில் முதலிட வருகை தருமாறு இலங்கை முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இரு நாடுகளுக்கடையிலும் எட்டு புரிந்துணர்வுகள் கைச்சார்த்திடப்பட்ட பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வ செங்கம்பள வரவேற்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இப்பேச்சுவாத்தையின் பின்னர் இரு நாடுகளுக்களுக்கும் இடையில் எட்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சார்த்திடப்பட்டன. அதனைத் தொடர்ந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, இரு நாடுகளுக்கிடையில் பொருளாதாரம், வர்த்தகம் மாத்திரமல்லாமல் கலாசாரத் தொடர்புகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டும். அத்தோடு சேவைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான உறவையும் மேலும் பலப்படுத்தவே நான் எதிர்பார்க்கின்றேன். இப்பிராந்தியத்தில் பாகிஸ்தானுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சார்த்திட்ட முதலாவது நாடு இலங்கை தான். என்றாலும் எமது இரு பக்க வர்த்தகத்தை ஒரு பிலிலயன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க வேண்டும்.

எம் இரு நாடுகளுக்கிடையில் மாத்திரமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் எமது நட்புறவு மேலும் மேம்படுத்தப்பட வேண்டிய தேவை நிலவுகின்றது. இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது விவசாயம், உயர்கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம், தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளிலும் இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டன. இத்துறைகளில் இரு பக்க உறவை எம்மால் மேலும் மேம்படுத்த முடியும்.

பாகிஸ்தானும், பாகிஸ்தான் மக்களும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை உதவி ஒத்துழைப்புக்களை நல்கியுள்ளது. அந்த உதவி ஒத்தழைப்புக்கள் என்றும் மறக்க முடியாதவை. எம்மிரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மென்மேலும் மேபடுத்தவும்,அதனைத் தொடரந்து நீடிக்க செய்யவும் நாம் உழைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடு திரும்பிய பெண் வீடு திரும்பவில்லை – மாமனார் புகார்…!!
Next post இந்த மூணு விஷயத்துல நீங்க சரியா இருந்தா…!!