முதன்முதலாக இலங்கையில் தந்தி சேவை தொடங்கப்பட்ட நாள்..!! (1-1-1858)
இலங்கையில் 1858-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தந்தி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது கொழும்புக்கும்- கலேக்கும் இடையே முதன்முதலாக தொடங்கியது.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1800 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.
* 1801 – பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்துப் பேரரசு இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது.
* 1804 – எயிட்டி பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
* 1806 – பிரெஞ்சு குடியரசு நாள்காட்டி பாவனையிலிருந்து விலக்கப்பட்டது.
* 1808 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.
* 1833 – ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகளின் மீது உரிமை கொண்டாடியது.
* 1861 – போர்ஃபீரியோ டயஸ் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினான்.
* 1866 – யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவல்துறை அமைக்கப்பட்டது.
* 1867 – ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் சின்சினாட்டி நகருக்கும் கென்டக்கியின் கொவிங்டன் நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.
* 1872 – இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
* 1872 – முதலாவது இந்திய அஞ்சல் (தபால்) சேனீ மலைச் (Mount Cenis) சுரங்கம் ஊடாக சென்றது.
* 1877 – இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா டெல்லியில் அறிவிக்கப்பட்டார்.
* 1883 – இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
* 1886 – பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.
* 1890 – எரித்திரியா இத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.
* 1893 – ஜப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
* 1896 – இலங்கையில் முன்னர் ரொபேர்ட்சன் கம்பெனியின் பொறுப்பில் இருந்த தொலைபேசி சாதனத்தை இலங்கை அரசு கையேற்றது.
* 1899 – கியூபாவில் ஸ்பானிய ஆளுகை முடிவுற்றது.
* 1901 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆஸ்திரேலிய பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார்.
* 1905 – டிரான்ஸ்- சைபீரியன் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
* 1906 – பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
* 1911 – வட மண்டலம் தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலிய நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.
* 1912 – சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.
* 1919 – ஸ்காட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில் 205 பேர் கொல்லப்பட்டனர்.
* 1926 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
* 1927 – மெக்சிக்கோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.
* 1927 – துருக்கி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி 1926, டிசம்பர் 18-ற்கு அடுத்த நாள் ஜனவரி 1, 1927-க மாற்றப்பட்டது.
Average Rating