துருக்கியில் கடும் பனிப்பொழிவு: இஸ்தான்புல் விமான நிலையத்தில் 142 விமானச் சேவைகள் ரத்து…!!

Read Time:1 Minute, 54 Second

4b7544c7-0063-4b52-a720-ae739f9a296c_S_secvpfபருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள ‘எல்நினோ’ பாதிப்பால் உலகின் பலநாடுகள் கடுமையான இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு வருகின்றன.

அவ்வகையில், துருக்கி நாட்டில் இந்த ஆண்டின் பனிப்பொழிவு வழக்கத்தைவிட சற்று கடுமையாக உள்ளது. குறிப்பாக, தலைநகர் இஸ்தான்புல்லில் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலையில் இருந்து பயங்கரமான உறைப்பனி கொட்டி வருகின்றது, இந்த பனிப்பொழிவு வரும் ஜனவரி இரண்டாம் தேதிவரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சாலைகளில் குவிந்து கிடக்கும் பனியால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பனியை அகற்றி சாலையை சீரமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான இயந்திர வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இஸ்தான்புல் நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் மற்றும் தரையிறங்கும் 142 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. உள்நாட்டு விமானசேவைகள் தவிர, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையத்தில் தற்போது அனல் கிளப்பி வரும் விவாதம் என்ன தெரியுமா…!!
Next post சீன சுரங்க விபத்து: 5 நாட்களுக்கு பிறகு 8 பேர் உயிருடன் மீட்பு…!!