குற்றச்சாட்டுக்களை மறுக்கும் சவுதித் தூதரகம்…!!

Read Time:1 Minute, 46 Second

yuuசவுதி அரேபியாவில் கல்லால் அடித்துக் கொல்லுமாறு தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண் தொடர்பில், அந்த நாட்டிலுள்ள, இலங்கைக்கான தூதரகத்தினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டை, இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் அஸ்மி தாசிம் (Azmi Thassim) மறுத்துள்ளார்.

இலங்கைப் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை தளர்த்துவது தொடர்பிலான மேன் முறையீடுகளை முன்வைப்பது குறித்து, இலங்கை அரசாங்கம் மட்டுமல்லாது, இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதரகமும் சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சவுதிய அரேபிய நீதிமன்றத்தால் இலங்கைப் பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொல்லுமாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் பிறிதொரு ஆணுடன் தகாத உறவைப் பேணியதாக கூறியே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இலங்கை தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு காரணமான அந்த தண்டனை சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயுள் தண்டனை அனுபவிக்கும் காதலனுடன் இணைந்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற காதலி…!!
Next post 37 வயதான நபர், 15 வயது மாணவி மீது துஷ்பிரயோகம்…!!