நம் உடல் நலனுக்கு அபாயம் தரும் மீன் வகைகள்…!!

Read Time:3 Minute, 8 Second

fish_health_002.w540‘மீன்கள்’ குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு. சிலர் அனைத்து வகை மீன்களையும் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். சிலர் முற்கள் அதிகம் இல்லாத மீனை மட்டும் விரும்பி சாப்பிடுவார்கள். சில மீன் பிரியர்கள் தேடி, தேடி புதிய வகை மீன்களை சாப்பிடுவார்கள்.

மீன் என்பதை நாம் அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம். அதிலும் வறுத்த மீன்கள் என்றால் எண்ணிக்கை இன்றி வயிற்றுக்குள் மிதக்கும்.

ஆனால், இதில் சில வகை மீன்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு என்று கூறுகிறார்கள். அவைகள் என்னென்ன?

கானாங்கெளுத்தி

கானாங்கெளுத்தி மீனில் இருக்கும் உயர்ரக மெக்னீசியம் உடலுக்கு நல்லது தான் எனிலும், இதில் உள்ள அதிகளவு பாதரசம் உடலுக்கு தீய தாக்கத்தை விளைவிக்கக்கூடியது ஆகும்.

விலாங்கு

மஞ்சள் அல்லது வெள்ளி நிறத்தில் இருக்கும் விலாங்கு மீன் அதிகளவு சாப்பிடுவது உடலுக்கு அபாயகரமானது. இதிலிருக்கும் அதிகப்படியான பாலிகுளோரினேடட் பைபினைல் மற்றும் பாதரசம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மைக் கொண்டவை.

வாளை மீன்

வாளை மீனிலும் அதிகளவு பாதரசம் இருக்கிறது. ஒரு வாளை மீனில் 976 ppm (Parts per million) பாதரசம் அளவு இருக்கிறது. அதிகளவு இது உடலில் சேரும் போது மூளையின் செல்களை இது சேதமடைய செய்கிறது. எனவே, அளவாக உண்ணும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள்.

சூரை

நீல நிற துடுப்பு மற்றும் பெரிய கண்கள் உடைய இரண்டு வகையான சூரை தான் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. வாளை மீனுக்கு அடுத்ததாக அதிகளவு பாதரசம் அளவு கொண்டுள்ள மீன் இதுவாகும்.

சால்மன் மீன்

சில வகை சால்மன் மீன்களில் கரிம மாசு நிலைபெற்று இருப்பதால், நீரிழிவு மற்றும் உடல்பருமன் அதிகரிக்க காரணியாக இருக்கிறது. அதிகளவில் இதை உட்கொள்வது உடல்நலனுக்கு அபாயமாக மாறலாம்.

சுறா

பால் சுறா போன்ற ஒருசில வகைகளை தவிர்த்து மற்ற அனைத்தும் விஷத்தன்மை கொண்டவை என்பதால் சுறாவை சாப்பிடக்கூடாது. மேலும் இதிலும் பாதரசம் அதிகளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எங்கிருந்து தங்கம் கிடைக்கும்! அதை உருவாக்கும் விதம்…!!
Next post கேள்வியின் நாயகனிடம் (ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம்) சில கேள்விகள்”..!! -கனக சுதர்சன்