ஐதராபாத்தில் டாக்டர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால் 6 குழந்தைகள் பலி

Read Time:1 Minute, 16 Second

00000555.gifஐதராபாத்தில் டாக்டர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால் தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் 6 குழந்தைகள் பலியானார்கள்.ஐதராபாத்தில் டாக்டர்களை தாக்கிய எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஐதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கிடைக்காமல் 6 குழந்தைகள் பலியாகி உள்ளனர். குழந்தை ஒன்றுக்கு சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததாக் கூறி மஜ்லீஸ் இத்தாகுதுல் முஸ்லிமின் கட்சியை சேர்ந்த அஸ்பர்கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐதராபாத், மருத்துவர்கள், போராட்டம், பலி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விமானக் குண்டு வீச்சு தாக்குதல்களினால் விவசாயிகளே அதிகளவில் பாதிப்பு
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…