தாய்லாந்தில் நாயை கிண்டல் செய்த தொழிலாளி கைது: அடுத்த நாளே இறந்த அரசரின் ஆருயிர் நாய்…!!

Read Time:1 Minute, 51 Second

187f6184-a42d-4d77-bc41-9d63778f982e_S_secvpfதாய்லாந்தில் பூமிபால் அதுல்யதேஜ் மன்னராக உள்ளார். அங்கு மன்னர் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவமதிப்பு செய்தால் அது மிகப்பெரும் குற்றமாக கருதப்படுகிறது. அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்படும். அதற்கு வகை செய்யும் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.

அண்மையில் மன்னரின் செல்ல நாயை அவமதித்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது பெயர் தனகோர்ன் சிரிபாய்பூன். தொழிலாளியான இவர் மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் செல்ல நாயை கேலி செய்து இன்டர்நெட்டில் தகவல் வெளியிட்டு இருந்தார். எனவே, அவர் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அத்துடன் அவர் மீது சேத துரோக குற்றமும் சுமத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குவான் டோங்டயீங் என்று அழைக்கப்படும் (பத்திரிகைகளில் கூட இந்த நாய் மேடம் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டது) அந்த நாய் கடந்த 26 ஆம் தேதி அரண்மனையில் தூங்கிக்கொண்டிருந்த போது இறந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனது விமர்சனத்திற்காக அந்த தொழிலாளி கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹாங்காங் பாரில் பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆஸ்திரேலிய மந்திரி ராஜினாமா..!!
Next post பாம்பனில் குடிசைக்குள் புகுந்த சுற்றுலா பஸ்: 11 பேர் காயம்…!!