மேல் மாகணத்தில் டெங்கு காய்ச்சல் பரவக் கூடிய அபாயம்…!!

Read Time:1 Minute, 38 Second

616298-dengue-1381458838-406-640x480மேல் மாகணத்தில் கழிவுப் பொருட்கள் தொடர்பில் போதிய முகாமைத்துவம் அற்ற மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் பரவக் கூடிய அபாயமுள்ளதாக மேல்மாகண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

நுகேகொடை,மொரட்டுவை,கொலன்னாவ,தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் அதிகளவில் டெங்குக் காய்ச்சல் பரவியுள்ளதை அவதானிக்க முடியுமென திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தீப்தி பெரேரா கூறினார்.

சுகதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் குறித்து சோதனை செய்யும் சந்தரப்பங்களில் மக்கள் தமது குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலும் கைவிடப்பட்ட இடங்கள்,பாழடைந்த கட்டடங்கள் மற்றும் ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் மக்கள் கழிவுப்பொருட்களை கொட்டுவதால் அவை அகற்றப்படாமல் டெங்கு நுளம்புப் பெருக்கத்திற்கு வழி வகுப்பதாக மேல்மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதன் ஊடாக வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை…!!
Next post பட்டப்பகலில் கல்லூரி மாணவியை காருக்குள் இழுத்துப்போட்டு கடத்திய கும்பல்: சிறிது நேரத்தில் விடுவிப்பு…!!