ஏமனில் பின்லேடன் முன்னாள் பாதுகாவலர் மரணம்…!!

Read Time:1 Minute, 58 Second

aaafdf39-12a3-4737-9cae-dc218532cb2a_S_secvpfபின்லேடனின் முன்னாள் பாதுகாவலர் ஏமனில் மரணம் அடைந்தார்.

தனது தீவிரவாத நடவடிக்கைகளால் உலக நாடுகளை அச்சுறுத்திய அல்கொய்தா தலைவர் பின்லேடன். பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அவரை அமெரிக்காவின் ‘சீல்’ என்ற அதிரடிப்படை கடந்த 2011–ம் ஆண்டு மே மாதம் சுட்டுக் கொன்றது.

இவரது முன்னாள் பாதுகாவலராக நசீர் அல்–பக்ரி என்பவர் இருந்தார். அவரை கைது செய்த அமெரிக்கா கியூபாவின் குவான்டனமோ வளைகுடாவில் தனது கடற்படை தளம் உள்ள சிறையில் அடைத்தது.

அங்கு கொடூர கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சில நாட்கள் அடைத்து வைத்து விசாரணை செய்த பின் விடுதலை செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து அவர் தனது சொந்த நாடான ஏமனுக்கு சென்றார். அங்கு கடுமையான உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் முகல்லாவில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் இறந்தார்.

இவர் பின்லேடனின் மிகவும் நம்பிக்கைக்குரியவர். ஆப்கானிஸ்தானில் பின்லேடன் தங்கியிருந்த போது அவருக்கு டிரைவராக பணிபுரிந்தார். தீவிரவாதி ஆன இவர் கடந்த 1990ம் ஆண்டுகளில் போஸ்னியா, சோமாலியா, மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் நடத்தினார். அதன் பின்னர் பின்லேடன் நடவடிக்கையால் கவரப்பட்டு அல்கொய்தா இயக்கத்தில் சேர்ந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் தலைவர் பிரபாகரனும், மனைவியும் உயிருடன் உள்ளனரா?: போரில் தப்பிய, மூத்ததளபதி தயாமோகன் விளக்கம்.. (வீடியோவில்)
Next post தண்டையார்பேட்டையில் சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது…!!