பனிமலையில் இருந்து இறங்கிய ஜப்பான் மலையேற்ற வீராங்கனை தவறி விழுந்து பலி…!!

Read Time:1 Minute, 40 Second

6f486852-7997-41da-814a-e27d3a478628_S_secvpfபனிமலையில் இருந்து இறங்கியபோது ஜப்பான் மலையேற்ற வீராங்கனை தவறி விழுந்து பலியானார்.

ஜப்பானின் புகழ்பெற்ற மலையேற்ற வீராங்கனை கீ தனி குச்சி (43). இவர் உலகில் உள்ள உயரமான மலை சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2007–ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். சிறந்த மலையேற்ற வீரர்களுக்கு பிரான்ஸ் பத்திரிகை மோன்டக்னஸ் சார்பில் வழங்கப்படும் ‘பயோலெட் டி.ஓ.ஆர்.’ விருதை பெற்றார். இதன் மூலம் இந்த விருதை பெற்ற முதல் பெண் என்ற புகழ் பெற்றார்.

இந்த நிலையில் அவர் ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணம் டைசெட் சுஜனில் உள்ள குரோடெக் பனிமலையில் ஏறினார். இதில் இருந்து இறங்கும்போது கீழே தவறி விழுந்தார்.

இதனால் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இத்தகவலை கீ தனிக் குச்சியின் நண்பரும், மலையேறும் வீரருமான ஹிரோஷி ஹகிவாரா தெரிவித்தார்.

ஜப்பானில் 6510 அடி (1924 மீட்டர்) உயரமுள்ள ‘குரோடெக்’ பனிமலையில் தனிக்குச்சியும், 4 பேரும் ஏறினார்கள். பின்னர் இறங்கியபோது தனிகுச்சி தவறி விழுந்து இறந்தார் என தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீன நிலச்சரிவு: பதைபதைக்க வைக்கும் பறவைக் கோண புகைப்படங்கள்…!!
Next post ஹெலிகாப்டரில் உயிர் தப்பிய பெனின் நாட்டு பிரதமர்…!!