முசிறி பஸ் நிலையத்தில் தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்..!!
தாயின் தலையில் கல்லை போட்டு மகன் கொலை செய்தார். முசிறி புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு திரணியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி தங்கம்மாள் (வயது 60). இவர்களது மகன் சுப்பிரமணியன் (40). பெரிய சாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சுப்பிரமணியன் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இதனால் தங்கம்மாள் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
தங்கம்மாள் வேலைக்கு செல்லும் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் சுப்பிரமணியன் வீட்டில் இருந்து வெளியே சென்று விடுவார். அது போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் முசிறி புதிய பஸ்நிலையத்தில் சுப்பிரமணியன் சுற்றி திரிவதாக தங்கம்மாளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு அவர் முசிறிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு சென்றதும் சுப்பிரமணியனை பார்த்த அவர், வீட்டிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டார். ஆனால் இரவாகி விட்டதால் பஸ் வசதி இல்லை. இதைத்தொடர்ந்து காலையில் செல்ல திட்டமிட்டு, மகனுடன் பஸ் நிலையத்திலேயே தங்கினார்.
இன்று காலை விடிந்ததும், தங்கம்மாள் மகனை அழைத்து கொண்டு வெள்ளூர் பஸ்கள் நிற்கும் பகுதிக்கு சென்றார். அப்போது சுப்பிரமணியன் வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார். இருப்பினும் அவரது கையை இறுகபிடித்து கொண்டு அழைத்து சென்றுள்ளார்.
பஸ் நிலையத்தின் கழிப்பறை அருகே செல்லும் போது, திடீரென ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் தங்கம்மாளை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார். பின்னர் அங்கு கிடந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து தங்கம்மாளின் தலையில் போட்டார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. சிறிது நேரத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினர்.
சில பயணிகள் சுதாரிப்புடன் செயல்பட்டு சுப்பிரமணியனை மடக்கி பிடித்து கைகளை கயிறால் கட்டினர். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக முசிறி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் (பொறுப்பு), சப்– இன்ஸ்பெக்டர் ரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் தங்கம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுப்பிரமணியனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை மகன் கொலை செய்த சம்பவம் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating