சீன நிலச்சரிவுக்கு மனிதத்தவறே காரணம்…!!

Read Time:2 Minute, 45 Second

a083821b-a186-420f-b7c2-3f62b98f2ec9_S_secvpfசீனாவில் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் மலைபிரதேசத்தில் உள்ள ஷென்சென் ஒரு தொழில் நகரமாகும். இங்கு கார்கள் முதல் செல்போன் வரை அனைத்து பொருட்களும் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அந்தத் தொழிற்பூங்காவில், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கட்டடப் பணிகளுக்காகத் தோண்டியெடுக்கப்பட்ட மண், 1 லட்சம் சதுர அடி பரப்பில், 100 மீட்டர் உயரத்துக்கு மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அங்கு சீனாவின் பல பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தங்கி பணிபுரிகின்றன. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பெய்த பலத்த மழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், தொழிற்பேட்டையில் உள்ள 33 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி மண்ணுக்குள் புதைந்தன. இதில் 25 பெண்கள் உள்பட 76 பேர் மண்ணுக்குள் புதையுண்டனர்.

இதையடுத்து அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள், தீயணைப்புப் படையினர், போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட 60 மணி நேரத்துக்குப் பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மண்ணுக்குள் புதையுண்ட மேலும் 3 பேரின் சடலங்கள் அண்மையில் மீட்கப்பட்டன. எஞ்சியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நிலச்சரிவு குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறியதாவது:

சீனாவின் ஷென்சென் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு மனிதத் தவறே காரணம். இந்த நிலச்சரிவுக்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு, கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று தெரிவித்த அதிகாரிகள் இந்த நிலச்சரிவு தொடர்பாக, கட்டுமான நிறுவன அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதையும் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவு விடுதிக்குள் கார் புகுந்தது: ஒருவர் பலி, ஐவர் காயம்…!!
Next post பரந்தனில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு..!!