பதுளை, கண்டி, நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் இனங்­கா­ணப்­பட்­டுள்ள 168 எயிட்ஸ் நோயா­ளர்கள்..!!

Read Time:2 Minute, 2 Second

timthumb (2)பதுளை, கண்டி மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் எயிட்ஸ் நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ள 168 பேர் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக எயிட்ஸ் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் இயக்­குநர் டாக்டர்.சிசிர லிய­னகே தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை மேற்­படி எயிட்ஸ் தொற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பாட­சாலை மாண­வியர் அறுவர் அடங்­கி­யி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

இது தொடர்பில் டாக்டர்.சிசிர லிய­னகே மேலும் கூறு­கையில்,

பெருந்­தோட்டப் பிர­தேசங்களில் எயிட்ஸ் தொற்று பரவி வரும் அபாயம் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போ­துள்ள கணிப்­பீட்டின் அடிப்­ப­டையில் இது­வ­ரையில் 168 பேர் பதுளை, கண்டி மற்றும் நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் எயிட்ஸ் தொற்­றுக்கு ஆளா­க­ியி­ருப்­பது இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது.

15 முதல் 25 வய­துக்­குட்­பட்­ட­வர்­களே இவ்­வாறு இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 27 பேர் யுவ­திகள் என்­பதும் அறுவர் பாட­சாலை மாண­வியர் என்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது.

பெருந்­தோட்டப் பிர­தே­சங்­களில் வாழும்மக்கள் இவ்­வி­ட­யத்தில் கவ­ன­மா­கவும் எச்­ச­ரிக்­கை­யா­கவும் செயற்­பட வேண்டும் என்­ப­துடன் பாட­சாலை மாண­வி­யரின் நடவடிக்கைகளில் பெற்றோரும் ஆசிரியர் சமூகமும் அதிக கவனம் செலுத்த வேண்டு மெனவும் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி..!!
Next post உயர்­தரப் பரீட்சை பெறு­பே­றுகள் அடுத்த வாரம் வெளி­யாகும்..!!