வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்ப இனி செல்போன் போதும்

Read Time:2 Minute, 7 Second

9.gifவெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புவது இனி சுலபம். ஆம்.செல்போன் இருந்தால் போதும். இந்த வசதியை அறிமுகம் செய்வதில் ஏர்டெல் நிறுவனமும் வெஸ்டர் மணி டிரான்ஸ்பர் நிறுவனமும் கைகோர்த்து உள்ளன. இதற்கான நவீன தொழில்நுட்பம், நடைமுறைகள் பற்றி இரு நிறுவனங்களும் ஆராய்ந்து வருகின்றன. புதிய சேவை, மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு அறிமுகமாகும். வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்துடன் இணைந்து, இச்சேவையை அறிமுகம் செய்யப் போவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் மூலம் எங்களது 5 கோடி வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் பெறுவது சுலபமானதாகிவிடும். இதன் மூலம், பணம் மிக வேகமாக வந்து சேரும். மிகக் குறைந்த அளவிலும் பணத்தை பெறலாம்‘‘ என்றார் ஏர்டெல் மார்க்கெட்டிங் இயக்குநர் கோபால் விட்டல். இந்தியாவில் வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் 45 ஆயிரம் மையங்களை கொண்டுள்ளது. இதில் 8,500 தபால் நிலையங்கள், 14,000 வங்கி கிளைகள் ஆகியவை அடக்கம். மொத்தம் 5 ஆயிரம் இடங்களில் இதன் சேவை இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவோருக்கு இது மிகவும் உதவியாக உள்ளது. தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடத்தில் இருக்கின்றனர். ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டின்படி, கடந்த ஆண்டில் ரூ.1.04 லட்சம் கோடியை குடும்பத்தினருக்கு இந்தியர்கள் அனுப்பி உள்ளனர். உலக அளவில் அனுப்பப்படும் பணத்தில் இது 10 சதவீதம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை 100 ரூபாயில் இலங்கை பறக்கலாம்
Next post அரசின் அடக்குமுறை எதிரொலி மலேசியாவை விட்டு வெளியேற விரும்பும் தமிழர்கள்