தற்கொலைதாரி தொடர்பாக தகவல் வழங்கக் கோரிக்கை!

Read Time:2 Minute, 5 Second

police_no.jpgஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தற்கொலைத் தக்குதலில் பலியான பெண் எனச் சந்தேகிக்கப்படுபவரின் படம் இது. இவர் தொடர்பான தகவல்களை பொது மக்களிடமிருந்த பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எதிர்பார்ப்பதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை பற்றி அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியதாவது: தற்கொலைத் தாக்குதல் நடத்திய பெண் வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்த சுஜந்தா என்பவர் எனவும் அவர் 1983 ஆம் ஆண்டில் பிறந்தவர் எனவும் இதுவரை நடத்தப்பட் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம்! 011 2431428 கொழும்புப் பிரதேச பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக, 011 2829384 மேல் மாகாண மற்றும் தென்பிரதேச பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, அத்துடன் 011 2854880 மற்றும் 011 2854885 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு இலங்கையிலுள்ள 410 பொலிஸ் நிலையங்களுடன் உடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை வழங்க முடியும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செல்போன் ஒலித்ததால் 46 பேர் கைது – நீதிபதி டிஸ்மிஸ்
Next post பொலநறுவையிலிருந்து வந்த தமிழ் இளைஞர் மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு