ஜூலை முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை..!!

Read Time:2 Minute, 15 Second

timthumb (7)உணவுப் பொருட்­களை பொதி­யிடப் பயன்­ப­டுத்தும் பொலித்­தீனை (லஞ்சீட்) தடை­செய்­வ­தற்கு சுற்றுச் சூழல் அதி­கார சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. குறித்த திட்­டத்தின் முதற் கட்­ட­மாக எதிர்­வரும் ஜூலை மாதத்­தி­லி­ருந்து அரச அலு­வ­ல­கங்கள் மற்றும் பாட­சா­லை­களில் லஞ்சீட் பாவ­னை­யினை தடை செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

லஞ்சீட் பாவ­னைக்கு பதி­லாக உணவுப் பொருட்­களை பொதி­யி­டு­வ­தற்குப் பொருத்­த­மான பாத்­தி­ரங்கள் மற்றும் வாழை இலை யை பயன்­ப­டுத்து­வ­தற்­கான ஊக்­கு­விப்பு வேலைத்­திட்­டங்­களை முன்­வைக்­க­வுள்­ள­தாக சுற்றுச் சூழல் அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது.

பொலித்தீன் பாவ­னை­யினை முழு­மை­யாக இல்­லா­தொ­ழிப்­ப­தனை பிர­தான நோக்­க­மாகக்­கொண்டு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள இத்­திட்­டத்தை எதிர்­வரும் ஜூலை மாதத்­தி­லி­ருந்து நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்­பார்ப்­ப­தாக சுற்றுச் சூழல் அதி­கார சபையின் தலைவர் பேரா­சி­ரியர் மேர்வின் லால் தர்­ம­சிறி தெரி­வித்­துள்ளார். இதன் முதல் கட்டம் அரச சேவைகள் திணைக்­களம் மற்றும் கல்­வி­ய­மைச்­சுடன் இணைந்து முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

அத்­துடன் லஞ்சீட் பாவ­னை­யினை தடை­செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் மற்றும் அரச, தனியார் துறை யினர் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீண்டகால முரண்பாடு கொலையில் முடிந்தது..!!
Next post ஈராக்கில் விமானப்படை அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். தீவிரவாத இயக்க தளபதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்..!!