விமான பணிப்பெண் தற்கொலை..!!

Read Time:3 Minute, 2 Second

timthumb (4)இந்தியாவின் மீனம்பாக்கத்தில் பணிச்சுமை காரணமாக விமான பணிப்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மீனம்பாக்கம் எயார்–இந்தியா குடியிருப்பில் வசிப்பவர் அனுப்நாயர் (வயது 32). ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் கடமை புரிபவர்.

இவரது மனைவி தன்பீரிட்பால்(30). இவர் அதே விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஹஸ்னி(2) என்ற மகள் உள்ளார்.

தன்பீரிட்பாலின் சொந்த ஊர் பஞ்சாப் ஆகும். கடந்த 2007–ம் ஆண்டு விமான பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார். விமானத்தில் பணியாற்றியபோது அனுப்நாயரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் இரவு அனுப்நாயர் வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தன்பீரிட்பால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மீனம்பாக்கம் பொலிஸிற்கு அறிவித்துள்ளார்.

குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், பணிச்சுமையால் வேதனை அடைந்த தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தன்பீரிட்பாலின் பெற்றோர் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் தன்பீரிட்பால் மஸ்கட்டிற்கு செல்ல வேண்டியவர். அதற்குள் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

தென்னக எயார்- இந்தியாவில் பணிப்பெண்கள் மற்றும் ஆண் பணியாளர்கள் என 600 பேர் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 300 முதல் 350 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் இவர்களுக்கு அதிக வேலைப்பளு ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜூனியர் பணிப்பெண்களுக்கு அதிக வேலைப்பளு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டிற்கு சென்று வந்தால் குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது ஓய்வு தர வேண்டும். ஆனால் ஜூனியர் ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் குறைவாக இருப்பதாகவும் இதனால் தன்பீரிட்பால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எமது உறவுகளை இழிவுபடுத்தும் பொறுப்பற்ற, கேவலமான, விபச்சார தமிழ் ஊடகங்கள்.. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பதில்..! (வீடியோவில்)
Next post ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீதான தாக்குதல் முறியடிப்பு…!!