டெல்லி விமான விபத்து: கோளாறு பற்றி விமானி எச்சரித்தபோதும் தொடர்ந்து பறக்கும்படி உத்தரவிட்டதாக அதிர்ச்சி தகவல்…!!

Read Time:1 Minute, 47 Second

041339f7-7012-4647-b7bf-c4be61e6a311_S_secvpfடெல்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பீச்கிராப்ட் பி 200 என்ற அந்த விமானத்தை ஓட்டியது கேப்டன் பகவதி பிரசாத் பட். இவர் நல்ல அனுபவம் பெற்ற விமானி. விபத்துக்குள்ளான விமானம் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் சர்வீஸ் செய்யப்பட்டது. மீண்டும் சர்வீஸ் செய்யப்படுவதற்கு 30 மணி நேரங்கள் பறக்க வேண்டும்.

இந்நிலையில் இன்று காலை விமானத்தின் என்ஜினை இயக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை கேப்டன் பகவதி பிரசாத் பட் கண்டுபிடித்துள்ளார். உடனே தரையில் உள்ள பி.எஸ்.எப். கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அது பெரிய தொழில்நுட்பக் கோளாறு இல்லை என்று கூறி தொடர்ந்து பறக்கும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் விமானம் உயரத்தில் பறக்க முடியாமல் திணறியவுடன், விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானம் பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் விழுந்து விடாமல் தவிர்த்துவிட்டதாகவும் தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரணி அருகே வீடு புகுந்து கல்லூரி மாணவியின் உதட்டை கடித்த வாலிபர் கைது…!!
Next post குழந்தையை பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு பெண் தப்பியோட்டம்..!!