பொலநறுவையிலிருந்து வந்த தமிழ் இளைஞர் மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு

Read Time:1 Minute, 23 Second

பொலநறுவையிலிருந்து கொழும்பிற்கு வந்துகொண்டிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் முக்கியஸ்தரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி ர.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். பொலநறுவையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் கடமைபுரியும் மட்டக்களப்பைச் சேர்ந்த தவநேசன் கவாஸ்கர் (வயது 25) என்பவரே கைதுசெய்யப்பட்டு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கொழும்பு நாரஹேன்பிட்டி தொடர்மாடிப் பகுதியில் நேற்று அதிகாலை நடந்த திடீர்ச் சோதனை நடவடிக்கையின்போது இளம் பெண்ணொருவரும் அவரது தாயாரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் குமரகுருபரன் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தற்கொலைதாரி தொடர்பாக தகவல் வழங்கக் கோரிக்கை!
Next post * பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை