இலங்கை கைதிகளை கடத்த முயன்ற வழக்கு * 16 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

Read Time:2 Minute, 51 Second

4947874.gifபோதை பொருள் கடத்தலில் கைதானவர்களை இலங்கைக்கு கடத்த முயன்ற வழக்கில், 16 பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இலங்கையில் கொழும்பு நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார்(45). அவரது நண்பர் இம்தியாஸ் அகமது (42); இருவரும், திருச்சியிலிருந்து இலங்கைக்கு ஹெராயின் கடத்த முயன்றனர். போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, புதுக்கோட்டை போதை பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. திருச்சி சிறையிலிருந்து இருவரையும், புதுகை நீதிமன்றம் அழைத்து வருவர். அப்போது இருவரையும் கடத்தி, இலங்கைக்கு தப்பிக்க வைக்க ஒரு கும்பல் திட்டமிட்டது. கடந்த ஆண்டு ஜூலை 26ம் தேதி கடத்தல் முயற்சி நடந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு கைதிகளை, பஸ் மூலம் திருச்சி சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். கீரனுõர் அருகே பஸ்சை வழிமறித்த ஒரு கும்பல், டிரைவர் மற்றும் போலீசாரை தாக்கியது; கைதிகளை கடத்திச் சென்றது. கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

துõத்துக்குடி கடலோரத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கைதிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிரபல ரவுடி மணல்மேடு சங்கரின் திட்டப்படி இந்த கடத்தல் நடந்தது என்பதும், அதில் 23 பேர் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதையடுத்து, மணல்மேடு சங்கர் உள்ளிட்ட 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், குமார் என்பவன் மட்டும் இதுவரை போலீசாரிடம் சிக்கவில்லை. மணல்மேடு சங்கர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

மீதமுள்ள 21 பேர் மீதான வழக்கு, புதுக்கோட்டை விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இதில், 16 பேருக்கு தலா இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி அய்யாசாமி தீர்ப்பளித்தார். கபிரியேல், சசீந்திரன், ரமேஷ், ஆத்மநாதன், சத்தியமூர்த்தி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மொபைல் குறுஞ்செய்தி அனுப்பி உலக சாதனை படைத்த சிறுவன்
Next post அமெரிக்காவில் கிளிண்டன் மனைவியின் அலுவலகத்திற்குள் புகுந்த மனித வெடிகுண்டு; 5 மணி நேரத்திற்குப் பின் போலீசிடம் சரண் அடைந்தான்