மனைவியை கொன்ற வழக்கில் அமெரிக்க இந்தியருக்கு ஆயுள்

Read Time:2 Minute, 45 Second

இந்தியாவை சேர்ந்த பெண்ணை கொலை செய்த அவரது அமெரிக்க இந்திய கணவர் மற்றும் மாமியாருக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஓகியோ மாகாணம் டிவின்ஸ்பர்க்கை சேர்ந்தவர் சேட்டன் பட்டேல் (33). இவரது தாய் மீனாட்சி பென் (50). சேட்டன் பட்டேலுக்கும் இந்தியாவை சேர்ந்த சீஜல் பட்டேல் (28) என்பவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு ஏழு மற்றும் நான்கு வயதில் குழந்தைகள் உள்ளன. கடந்த 2005ம் ஆண்டு சீஜல் கொலை செய்யப்பட் டார். அவரது உடல், விளையாட்டு பொருட்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனத்தின் பின்பக்கத்தில் கிடந்தது. இது தொடர்பாக சேட்டன் பட்டேல் மற்றும் மீனாட்சி பென் மீது வழக்கு தொடரப்பட்டது. சேட்டன் பட்டேல் தரப்பில், சீஜலுக்கும், ரூபல் பட்டேல் (33) மற்றும் விஜய் பட்டேல் (37) ஆகியோருக் கும் இடையே கள்ள உறவு இருந்ததாகவும், அவர்கள் தான் இந்த கொலையை செய்வதர்கள் என்றும் வாதிடப்பட்டது. ஆனால், அரசு தரப்பில், சீஜல் இந்திய கலாசாரத்தை பின்பற்றாததால் அவருக்கும், அவரது மாமியார் மீனாட்சி பென்னுக்கும் இடையே தொடர்ந்து குடும்பத்தில் பிரச்னை வலுத்து வந்ததாகவும், போலீஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. ரூபல் பட்டேல் மற்றும் விஜய் பட்டேல், தங்களுக்கு சீஜல் குடும்பத்துடன் எந்த உறவும், தொடர்பும் கிடையாது என்று வாதிட்டனர்.

விசாரணையின் முடிவில் மனைவியை கொலை செய்த கணவர் சேட்டன் பட் டேல், மாமியார் மீனாட்சி பென் ஆகியோ ருக்கு, படுகொலை செயலுக்கும், தடயத்தை மாற்ற முயன்றதற் கும், பிணத்தை வீசி எறிந்ததற்கும் ஆயுள் தண்டனை விதித்து ஓகியோ கோர்ட் தீர்ப்பளித்தது. சேட்டனுக்கு 30 ஆண்டுக்கு முன் பரோல் கிடையாது என்றும், மீனாட்சி பென்னுக்கு 25 ஆண்டுக்கு முன் பரோல் கிடையாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யாழில் இனந்தெரியாதவர்களால் இருவர் சுட்டுக்கொலை ..!
Next post செல்போன் ஒலித்ததால் 46 பேர் கைது – நீதிபதி டிஸ்மிஸ்