அமெரிக்கா: ஹிலாரி ஒரு லெஸ்பியன்? அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு அதிகாரப்பூர்வமான பிரசாரம் துவங்குவதற்கு முன்பே, தலைவர்கள் பற்றிய வதந்திகள் அதிகளவில் பரப்பப்படுகின்றன. அதில் ஒன்று, தனது உதவியாளரும் மிக அழகானவருமான ஹுமா அபெடினுடன் ஹிலாரி லெஸ்பியன் உறவு வைத்திருப்பதாக எழுந் துள்ள வதந்தி. அதிபர் தேர்தலில், தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதற்கு பதில், தாங்கள் விரும்பாத தலைவர்கள் பற்றி வதந்திகள் பரப்புவது, இம்முறை பெரிதும் அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தரம்தாழ்ந்து, தலைவர்கள் விமர்சிக்கப்படுகின்றனர். எப்போதும் ஹிலாரி கிளின்டனுடனே இருப்பவர் ஹுமா அபெடின். சாலையில் போகும் போது கூட, இருவரையும் பிரிக்க முடியாது. இதனால், இவர்கள் இருவருக்கும் லெஸ்பியன் உறவு இருப்பதாக வதந்தி கிளப்பப்பட்டுள்ளது. இ-மெயில் துவங்கி சாதாரண கடிதம் மூலம் வரை இந்த வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.ஹிலாரி மட்டுமின்றி, அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள மற்ற தலைவர்கள் குறித்தும் வதந்தி பரப்பப்படுகிறது. ரூடி கிலானியின் மனைவி, அப்பாவி நாய்க்குட்டிகள் கொல்லப்படுவதை ஆதரிக்கிறாராம். பரக் ஒபாமா, முஸ்லிம் பயங்கரவாதியாக சித்தரிக்கப்படுகிறார். பிரெட் தாம்சன், ஊழல் பிளேபாயாக வர்ணிக்கப்படுகிறார். இப்படி ஒவ்வொரு தலைவர்கள் குறித்தும் பல்வேறு விதமான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து ஹிலாரியிடம் கேட்ட போது, `என்னைப் பற்றி, பலர் பலவிதமாக சொல்கின்றனர். எனவே, இதுபற்றி நான் கவலைப்படவோ அல்லது கவனிக்கப் போவதோ இல்லை. இவை எல்லாம் உண்மையில்லை. ஆனாலும், இதுபோன்றவற்றை என்னால் கட்டுப்படுத்த முடியாது. யார் என்ன விரும்புகின்றனரோ அதை சொல்லிவிட்டு போகட்டும்’ என்று ஒதுக்கித் தள்ளி விட்டார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...