சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 கட்டிடங்கள் சரிந்து விழுந்தன: 22 பேரை காணவில்லை…!!

Read Time:1 Minute, 33 Second

eeb65fc4-23cf-4977-9080-f37db7efacdf_S_secvpfதெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஷென்ஸேன் நகரில் உள்ள தொழிற் பூங்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 22 பேரை காணாவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து நடந்த தொழிற் பூங்காவில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டிடங்கள் கட்டுவதற்காக தோண்டப்பட்ட மண் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த மணல் சரிந்து அருகில் உள்ள கட்டிடங்களை மூடிவிட்டதகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலச்சரிவு காரணமாக அருகில் இருந்த சுமார் 22 கட்டிடங்கள் சரிந்து விழுந்துவிட்டன. மேலும் 20 சதுர மீட்டர் பரப்புள்ள இடம் மண்ணில் புதைந்துள்ளது.

சரிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்து இதுவரை 900 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 17 ஆண்கள் 5 பெண்கள் உட்பட 22 பேரை காணவில்லை என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் ஏதுவும் இல்லை. தீயனைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்ணை மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளி கொல்ல முயற்சி: வழிப்பறி கும்பல் வெறிச்செயல்…!!
Next post இந்தோனேசியாவில் கப்பல் மூழ்கி விபத்து: 3 பேர் பலி, 80 பேரை காணவில்லை…!!