புலிகள் 12 முறை முயன்றும்; என்னைக் கொல்ல முடியவில்லை! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்!!
என்னைப் படுகொலை செய்வதற்கு புலிகள் 12 முறை முயன்றும் தோற்றுப்போய்விட்டனர். புலிகளின் பயங்கரவாதச் செயற்பாட்டின் மூலம் என்னைக் கொலை செய்ய முடியாது. இத்தாக்குதலில் எமது நீண்டகால உறுப்பினரான தோழர் ஸ்டீவன் கொல்லப்பட்டதே பெரும் இழப்பாகும் என்று அமைச்சரும், ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமுமாகிய டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமைச்சரை இலக்கு வைத்து கொழும்பில் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது பற்றி அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது: சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சுக் கட்டிடத்திற்குள் புலிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டும் இருவர் காயமடைந்தும் உள்ளனர். பெண் குண்டுதாரியால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் எமது கொழும்பு மாவட்ட அலுவலகப் பொறுப்பாளர் தோழர் ஸ்டீவன் பீரிஸ் பலியாகியுள்ளார். அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரான சித்திரன் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளார். அதிர்ஷ்ட வசமாக அந்த வேளையில் என்னைச் சந்திக்க வந்திருந்த பொது மக்கள் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. என்னைக் கொலை செய்து தமிழ் மக்களின் ஜனநாயகக் குரலை மௌனித்துப் போகச் செய்ய வேண்டுமென்பதே பிரபாகரனின் திட்டமாக இருக்கிறது. இச்சம்பவத்துடன் சுமார் பன்னிரண்டு தடவைகள் நேரடியாகக் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அவை ஒவ்வொன்றும் படுதோல்வியையே கண்டுள்ளன.
புலிகளின் இவ்வாறான கொலை முயற்சிகள் அவர்கள் ஜனநாயகம், மாற்றுக்கருத்து என்பவற்றைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்பதையும் தாம் பயங்கரவாதிகள்தான் என்பதையுமே வெளியுலகுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான தாக்குதல்கள் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வுக்காக நாம் புரியும் மக்கள் சேவைக்கு எந்தவகையிலும் தடையாக அமையாது. மாறாக எமது கட்சின் வேலைத்திட்டங்கள் சரியான திசையில் சாத்தியமான அணுகுமுறையில் முன்னெடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கையையே மேலோங்கச் செய்கிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...