ஏமனில் உள்நாட்டு போர்: குண்டு வீச்சில் 2 தமிழர்கள் உடல் சிதறி பலி…!!

Read Time:6 Minute, 16 Second

9667b676-33b2-4fb1-8cad-2ac22f6852c9_S_secvpfஏமன் நாட்டில் அந்நாட்டு அரசு படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளருக்கும் இடையே கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடை பெற்று வருகிறது. இதில் இருதரப்பினரும் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும் அதன் கூட்டு படையினரும் களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அங்கு ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பி இருந்தது. இந்நிலையில் சவுதி அரேபியா எல்லையில் ஹராத் நகரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி ஏமன் படையினரும், கிளர்ச்சியாளர்களும் கடுமையான மோதலில் மீண்டும் ஈடுபட்டனர். இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த குண்டு வீச்சில் இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பொது மக்களும் உயிரிழந்தனர். மொத்தம் 75 பேர் வரை பலியாகி இருக்கின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த இருவரும் பலியாகி இருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது, கள்ளக் குறிச்சியை சேர்ந்த அந்தோணி ஆகியோர் அங்கு தங்கியிருந்து பணிபுரிந்து வந்தனர். இவர்களும் குண்டு வீச்சில் பலியாகி இருப்பது அவர்கள் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய தகவல் ஏமன் நாட்டு அரசாங்கம் மூலமாக இந்திய அரசுக்கு முறைபடி தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து இருவரது உடல்களையும் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. உயிரிழந்த முகமது பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:–

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பிச்சாவலசை கிராமத்தை சேர்ந்த முகமது (48).

குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 10 ஆண்டுக்கு முன்பே சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அங்கு ஏமன் நாட்டின் எல்லையோர நகரமான நஜ்ரனில் தங்கி இருந்து வேலைபார்த்து வந்தார். இவருடன் தமிழகத்தை சேர்ந்த சிலரும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் சொந்த ஊருக்கு வந்த முகமது சில நாட்கள் கழித்து மீண்டும் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில்தான் நேற்று ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபியா இடையே நடந்த குண்டு வீச்சில் முகமது பலியாகி இருக்கிறார்.

குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு தனது அறையில் இருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்த போதுதான் முகமது பலியாகி உள்ளார். ஏமன் கிளர்ச்சியாளர்கள் வீசிய குண்டு இவரது அருகில் வந்து விழுந்து வெடித்தது. இதில் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். முகமதுவுக்கு பரக்கத் நிஷா என்ற மனைவியும், வாஜித் என்ற மகனும், அஸ்மத் என்ற மகளும் உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த முகமதுவின் மனைவி பரக்கத் நிஷா மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

குண்டு வீச்சில் பலியான கள்ளக்குறிச்சியை சேர்ந்த அந்தோணி பற்றிய முழு விவரம் தெரியவில்லை.

இதை கண்டறிவதற்காக கள்ளக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தோணி பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கொட்டாளம் கிராமத்தை சேர்ந்த பலர் ஏமன் நாட்டுக்கு வேலைக்கு சென்று இருக்கிறார்கள். அந்தோணி அந்த பகுதியை சேர்ந்தவரா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது?

இது தொடர்பாக கள்ளக் குறிச்சி டி.எஸ்.பி. மணிவண்ணன் கூறியதாவது:–

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த அந்தோணி என்பவர் இறந்திருப்பதாக மட்டுமே தகவல் வந்துள்ளது. மற்ற விவரங்கள் எதுவும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. எனவே, கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து அந்தோணி என்ற பெயரில் உள்ள 39–க்கும் மேற்பட்டவர்கள் அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்றிருக்கிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அந்தோணி யார்? என்பது கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் போலீசாரை அனுப்பி வைத்து விவரங்களை சேகரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பலியான 2 தமிழர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிதக்கும் சந்தை தொகுதிக்கு அருகிலுள்ள வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு…!!
Next post கழிப்பறையில் மர்மப் பொருள்: 473 பேருடன் பாரிஸ் சென்ற ஏர் பிரான்ஸ் விமானம் கென்யாவில் அவசர தரையிறக்கம்…!!