கர்ப்பிணிகள் குடிப்பதற்கு ஏற்ற ஆரோக்கிய பானங்கள்…!!

Read Time:3 Minute, 42 Second

கர்ப்பிணி2பெண்களை கர்ப்ப காலத்தில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதே சமயம் பெண்கள் தங்கள் உடலில் நீர்மச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். அதற்கு தண்ணீரை அதிகம் குடிப்பதுடன், நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்குமாறான பானங்களை பருக வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பருக வேண்டிய சில ஆரோக்கிய பானங்கள் உள்ளன. இந்த பானங்களை அருந்திவந்தால் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, மலச்சிக்கல், சிறுநீரக பாதைத் தொற்று போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம். சரி, இப்போது கர்ப்பிணிகள் குடிப்பதற்கு ஏற்றவாறான அந்த ஆரோக்கிய பானங்களைப் பார்க்கலாம்.

* கர்ப்பிணிகள் க்ரீன் டீ குடிப்பது நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் அளவாக குடித்து வந்தால், ஆரோக்கியமாக இருக்கலாம். குறிப்பாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

* கர்ப்பிணி பெண்களுக்கு பால் மிகவும் இன்றியமையாத உணவுப் பொருள். இதனால் அவர்களின் உடலில் நீர்ச்சத்து மட்டுமின்றி, கால்சியமும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, பாலானது செரடோனின் அளவை அதிகரித்து, மனதை அமைதிப்படுத்தும். ஆகவே அத்தகைய பாலில் எவ்வித பொருட்களையும் சேர்க்காமல் கர்ப்பிணிகள் குடித்து வர வேண்டும். அதிலும் கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 2 முறை தவறாமல் பால் குடிக்க வேண்டும்.

* கர்ப்பிணிகளுக்கு அவகேடோ மிகவும் ஆரோக்கியமான பழம். எனவே அத்தகைய பழத்தை ஸ்மூத்தி போன்று செய்து குடித்தால், இரத்த அழுத்தம் சீராக இருப்பதுடன், உடலில் உள்ள மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களும் சீராக இயங்கும்.

* ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால், இதனை கர்ப்பிணிகள் குடித்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றல் அதிகரித்து, கர்ப்ப காலத்தில் நோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமின்றி, ஆரஞ்சு ஜூஸ் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவியாக இருக்கும்.

* செர்ரி ஜூஸை கர்ப்பிணிகள் குடித்து வந்தால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

* கர்ப்ப காலத்தில் காலை வேளையில் ஏற்படும் சோர்விற்கு கர்ப்பிணிகள் இஞ்சி டீ வைத்துக் குடித்தால், அதனை உடனே சரிசெய்யலாம். அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிகள் இஞ்சி டீயை குடிக்கும் போது, அவர்களின் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கு முதல்வர் தலைமையில், குளிர்காய விரும்புவோர்!!! -ராம்…!!
Next post வங்கதேசத்தின் கடற்படை தள மசூதிகளில் குண்டு வெடிப்பு: 6 பேர் காயம்..!!