‘சாக்லேட்டுக்கு’ பெண்-‘ஸ்னாக்ஸுக்கு’ ஆண்!!

Read Time:3 Minute, 55 Second

லண்டன்: சாக்லேட்டுகள், இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு பெண் குழந்தை பிறக்குமாம். அதேபோல, சிப்ஸ், பர்கர் போன்ற ஸ்னாக்ஸுகளை விழுங்கினால் ஆண் குழந்தை பிறக்குமாம். தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று இந்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வில் சர்க்கரை அதிகம் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரும்பாலும் பெண் குழந்தைகளே பிறப்பதாகவும், சிப்ஸ்கள், பர்கர் போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிடும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆண் குழந்தைகள் பிறப்பதாகவும் அவர்களது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில், அந்தக் குழந்தைகளின் தாயார் சாப்பிடும் சாப்பாடும் முக்கியப் பங்கு வகிக்கிறதாம். முதலில் இது தொடர்பான சோதனையை எலிகள் மீது ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்படி, இனிப்பு பதார்த்தங்களை அதிகம் சாப்பிடுவோருக்கு பெரும்பாலும் பெண் குழந்தைகளே பிறப்பதாகவும், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடுவோருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

சோதனையின் ஒரு பகுதியாக 20 பெண் எலிகளுக்கு டெக்ஸமீதசோன் என்ற ஸ்டிராய்ட் செலுத்தப்பட்டது. இந்த ஸ்டிராய்ட், எலிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைவாகவே வைத்திருக்க உதவும். அதன் பின்னர் அந்த கர்ப்பிணி எலிகளின் கருக்கள், சர்க்கரை அளவு அதிகம் இல்லாத சாப்பாடு கொடுக்கப்பட்ட 20 எலிகளின் கருவுடன் ஒப்பிடு செய்து பார்க்கப்பட்டது.

இதில் வழக்கமான சாப்பாடு கொடுக்கப்பட்ட எலிகளின் குஞ்சுளில் 53 சதவீதம் ஆண் குஞ்சுளாக இருந்தன. ஸ்டிராய்ட் கொடுக்கப்ட்ட எலிக் குஞ்சுகளில் 41 சதவீதம் மட்டுமே ஆண்களாக இருந்தனவாம்.

இப்போதைக்கு எலியில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த சோதனை அடுத்த கட்டமாக மனிதர்களிடமும் செய்து பார்க்கப்படவுள்ளது.

பாலினத்தை நிர்ணயிக்க உதவும் எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்களை ஜஸ்ட் லைக் தட் மாற்றி விடும் அசாத்திய திறமை, நாம் சாப்பிடும் சாப்பாட்டில் இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக பிரிட்டோரியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தைகளின் வளர்ச்சி, கருச்சூழல் உள்ளிட்டவற்றையும் பாதிக்கும் சக்தியும் சாப்பாட்டுக்கு இருப்பதாகவும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இனிமேல் பார்த்து சாப்பிடணுமப்பா!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குண்டு வெடிப்பில் இறந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு! மூன்று சிறு குழந்தைகளும் படுகாயம்
Next post நண்பருடன் ஓடிய மனைவியை கணவர் ஏற்க மறுப்பு: கள்ளக் காதலன் தலைமறைவு