போர் உச்சத்தில் இருக்கும் சிரியாவிற்கு சுற்றுலா செல்ல ரஷ்ய நிறுவனம் ஏற்பாடு…!!

Read Time:1 Minute, 45 Second

eb161912-f47a-4784-b098-2ab001c30f0f_S_secvpfஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் சிரிய நாட்டின் பகுதிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும் என்று ரஷ்ய சுற்றுலா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கம், சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் தோன்றி, இன்று உலகம் முழுவதும் பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக சண்டை நடைபெறும் பகுதிகளுக்கும், நாட்டின் மற்ற சில பகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு முதல் பொது மக்களை சுற்றுலா அழைத்துச் செல்ல இருப்பதாக ரஷ்ய சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆசாத் டூர் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டமானது அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் ரஷ்யாவில் உள்ள சிரிய தூதரகத்தை அணுகியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சிரிய போர் காரணமாக லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் மேற்குரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் பள்ளிக்கு வெடிகுண்டு வைப்பதாக ஜோக் அடித்த சீக்கிய மாணவன் கைது..!!
Next post பள்ளிக்கரணையில் பாதிரியாரை வெட்டிய 4 பேர் கைது…!!