நான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல.. -திவ்யா குமுறல்
நான் ஒன்றும் கவர்ச்சி நடிகை அல்ல, அப்படி ஒரு இமேஜை உருவாக்க இங்கே சிலர் முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் திவ்யா. அவர் கைகாட்டுகிற திசை கே.எஸ்.அதியமான் நிற்கிற திசையாக இருப்பதுதான் வில்லங்கம்! தூண்டில் படத்திற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்போது தன்னுடைய லேப்-டாப்பை காணவில்லை என்று குமுறிய திவ்யா, அதற்கான பணத்தை தயாரிப்பாளர் கொடுத்தால்தான் மேக்கப்பே போடுவேன் என்று அறையை விட்டு வெளியே வர மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் திவ்யாவின் அஜாக்கிரதைக்கு தன் பணத்தை அழுதார் தயாரிப்பாளர். ஒருவழியாக படத்தை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியதும் தூண்டில் பட இயக்குனர் அதியமான் செய்த முதல் வேலை, பாடல் காட்சிகளில் எடுக்கப்பட்ட திவ்யாவின் கவர்ச்சி படங்களை நெட்டில் உலவ விட்டதுதான். இதனால்தான் தனக்கு கவர்ச்சி இமேஜ் வந்துவிட்டதென்று கருதுகிறார் திவ்யா. பொல்லாதவன் படத்தில் கூட, கூடுதல் கவர்ச்சிக்கு நோ சொல்லிவிட்டாராம். தீபாவளிக்கு வந்த படங்களில் வெற்றிப்பட லிஸ்டில் பொல்லாதவனுக்கும் இடம் கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறார் திவ்ஸ். அடுத்தடுத்த படங்களில் நல்ல நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும். வெறும் கவர்ச்சி காட்டுவார் என்று யாராவது வந்தால், இப்பவே சொல்லிட்டேன்… வராதீங்க! கட் அண் ரைட்டாக பேசுகிற திவ்யா, தானே டப்பிங் பேசுகிற அளவுக்கு தமிழ் பேசுகிறார் என்பதுதான் கூடுதல் தகவல்!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...