கொழும்பில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் இருபது பேர் பலி..!

Read Time:2 Minute, 24 Second

c_colombo.jpgஇலங்கைத் தலைநகர் கொழும்பில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் இருபது பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது. இலங்கையில் கொழும்பு ம நகர எல்லைக்கு சற்றே தள்ளியுள்ள மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் நிகழ்ந்த பார்சல் குண்டு வெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக இலங்கையின் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் அவரை கொல்வதற்காக குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட உடல் ஊனமுற்ற பெண்ணும், டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். அப்போது டக்ளஸ் தேவானந்தா அங்கு இல்லாததால் அவர் உயிர்தப்பினார். இந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங் களுக்கும் விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. மாவீரர் தினத்தையொட்டி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கை அரசை மிகக் கடுமையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த சம்பவங்கள் நடைபெற்றது குறிப் பிடத்தக்கது. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அப்பாவி மக்களுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் கோழைத் தனமான செயல் என்று இலங்கை அரசு கடுமையாக கண்டனம் தெரிவித் துள்ளது.இத்தகைய செயல்களால் பயங்கர வாதத்திற்கு எதிரான தங்களுடைய போரை நிறுத்திவிட முடியாது என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்க ளில் 20 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பில் பதட்டம் நிலவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திடீர் வாந்தி, மயக்கம்
Next post துருக்கியில் விமானம் விழுந்து 56 பேர் பலி