மகனின் காதலியை வெட்டிகொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை: மகளிர் கோர்ட்டு தீர்ப்பு…!!

Read Time:3 Minute, 37 Second

f448a57b-a7e0-4a07-bd80-1ce0b5cf59e3_S_secvpfஈரோட்டை அடுத்த சித்தோடு சொட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 48). இவரது மகன் ரகுநாத் (24).

வாலிபர் ரகுநாத், ஈரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் கடையில் வேலை பார்த்தார். அதே கடையில், ஈரோடு மூலப்பாளையம் தீரன் சின்னமலை வீதியை சேர்ந்த சத்தியபாமா (23) என்ற இளம்பெண்ணும் வேலை பார்த்தார்.

இதனால் ரகுநாத்துக்கும், சத்தியபாமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பிறகு அது காதலாக மலர்ந்தது. காதலர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து பழகி வந்தனர்.

இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் ரகுநாத்தின் தந்தை ஈஸ்வரனுக்கு தெரியவந்தது. இதனால் அவர் ஆத்திரம் அடைந்தார்.

பின்னர் ரகுநாத்தை அழைத்து ‘இனி சத்திய பாமாவுடன் பழக கூடாது’ என்று கண்டித்தார். இதனால் ரகுநாத், சத்தியபாமாவுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதனால் கோபமடைந்த சத்தியபாமா கடந்த 11–5–2014 அன்று சொட்டையம்பாளையத்தில் உள்ள ரகுநாத் வீட்டுக்கு சென்றார். அவருடன் நண்பர்கள் சுரேஷ், ராஜேந்திரன் ஆகியோரையும் அழைத்து சென்றார். வீட்டில் ஈஸ்வரனும், ரகுநாத்தும் இருந்தனர்.

அப்போது ஈஸ்வரனிடம் சத்தியபாமா, ‘‘ எங்களது காதலை எப்படி பிரிக்கலாம்? எனக்கு நியாயம் வேண்டும்’’ என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரன், உடனே வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சத்தியபாமாவை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இந்த சமயத்தில் வாலிபர் ரகுநாத்தும் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த கொலை குறித்து சித்தோடு போலீசில் சத்தியபாமாவுடன் சென்றிருந்த வாலிபர்கள் சுரேஷ், ராஜேந்திரன் ஆகியோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை ஈஸ்வரன், மகன் ரகுநாத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் இன்று மதியம் தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு, மகனின் காதலியை கொலை செய்த தந்தை ஈஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் வாலிபர் ரகுநாத் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவரை நீதிபதி திருநாவுக்கரசு விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிலிப்பைன்சை தாக்கிய மெலர் சூறாவளி: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…!!
Next post அயனாவரத்தில் கடத்தப்பட்ட சிறுமி கடலாடியில் மீட்பு: வாலிபர் கைது…!!