பிலிப்பைன்சை தாக்கிய மெலர் சூறாவளி: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…!!

Read Time:1 Minute, 58 Second

588f0bac-57bc-4000-b96f-5baeef3babf3_S_secvpfபிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதிகளை திங்கள் கிழமை கடும் சூறாவளி தாக்கியது. மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த இந்த மெலர் சூறாவளி தாக்கியதையடுத்து கடும் காற்றுடன் கனமழை பெய்து. அந்நாட்டின் 7 மாகாணங்கள் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு மின்சாரம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் இல்லாத பகுதியிலும் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளதால் பல லட்சம் மக்கள் இருளில் தொலை தொடர்பு வசதியின்றி தவித்து வருகின்றனர்.

இந்த சூறாவளி மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, சூறாவளி நெருங்கி வருவதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு மாகாணங்களில் உள்ள சுமார் ஏழரை லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 20-க்கும் மேற்பட்ட கடும் புயல்கள் தாக்கி வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் வீசிய புயலில் 54 பேர் உயிரிழந்தனர். சென்ற 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய புயலில் சிக்கி சுமார் 7,350 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணிக்கு 213 கி.மீ. வேகத்தில் சிட்னி நகரை ஆலக்கட்டி மழையுடன் தாக்கிய கோரப்புயல்: கார்கள், வீடுகள் சேதம்…!!
Next post மகனின் காதலியை வெட்டிகொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை: மகளிர் கோர்ட்டு தீர்ப்பு…!!