வேதாரண்யம் அருகே படகு மூலம் மீண்டும் பள்ளிக்கு சென்ற மாணவ–மாணவிகள்…!!

Read Time:2 Minute, 28 Second

91617d91-de04-47f4-a6f9-9386ef2d306d_S_secvpfவேதாரண்யம் தாலுக்கா ஆதனூர் ஊராட்சியில் தரைப்பாலம் உடைந்து விட்டதால் ஆதனூரிலிருந்து பாலத்தை கடந்து செல்ல முடியாததால் 50–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுபட்டது.

வேதாரண்யம் தாலுக்கா தகட்டூரிலிருந்து ஆதனூர் வழியாக மானங்கொண்டான் ஆற்றின் தண்ணீர் கலக்கிறது. ஆற்று தண்ணீர் வேகத்தால் கடந்த 12 –ந்தேதி ஆதனூர் தரைப்பாலம் சுமார் 20அடி தூரத்திற்கு உடைந்து விட்டது. பாலம் உடைந்ததால் ஆதனூர்–கோவில்தாவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் இப்பகுதியில் உள்ள 500 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலம் உடைந்து தண்ணீர் வேகமாக செல்வதால் பாலத்தில் யாரும் செல்லாமல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் மழையால் பாதித்த பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆதனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 114 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதில் பாலத்திற்கு வடபுறம் உள்ள ஆதனூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். பாலம் உடைந்து விட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத காரணத்தால் 50–க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றுத்துடன் வீடு திரும்பினர். இதேபோல் வண்டல் கிராமத்தில் ஆற்று நீரும், மழை நீரும் தேங்கி கடந்த 2 மாத காலமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் வண்டலில் இருந்து படகு மூலம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வந்தனர். விடுமுறைக்குப் பின் பள்ளி திறக்கப்பட்ட நேற்று வழக்கம் போல படகில் பள்ளிக்கு சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இங்கிலாந்து வீரர்…!!
Next post வெம்பாக்கம் அருகே காதலியின் உறவினர்கள் தாக்கியதால் காதலனின் தாய் தூக்குபோட்டு சாவு…!!