கிளிநொச்சியில் ரயில்மோதி குடும்பஸ்தர் பலி…!!
கிளிநொச்சியில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி முதியவர் ஒருவர் இறந்துள்ளார்.
இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் இலக்கம் 355 மோதியே உதயநனகர் கிழக்கைச் சேர்ந்த இராமசாமி பழனியாண்டி வயது 76 என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புகையிரதம் மூலமே அருகில் உள்ள கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு வாகனம் இன்றி நீண்ட நேரமாக புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டிருந்து.
இதனையடுத்து பொலீஸார் குறித்த சடலத்தை பொறுப்பேற்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கிளிநொச்சி ஏ- 9 பாதையிலிருந்து கிளிநொச்சி உதயநகர் மேற்கிற்குச் செல்லும் வழியில் பாதுகாப்பு கடவை பொருத்தப்படாத பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இதனால் கொழும்பிலிருந்து யாழ் செல்லும் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் தாமதமடைந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முதலில் பொறியியலாளர் ஒரவர் யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி மரணமடைந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே கிளிநொச்சி நகரத்திலும் வடக்கின் ரயில் மார்க்கத்திலும் பாதுகாப்பற்ற டவையின்றி ரயில்மோதி பலர் உயிரிழந்துள்ளனர்.
இதைத் தவிர பாதுகாப்பற்ற பல ரயில் கடவைகள் இன்னமும் பாதுகாப்பு கடவைகள் பொருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன. கிளிநொச்சி நகரத்தில் மாத்திரமின்றி ரயில் மார்க்கம் முழுவதிலும் இவ்வாறே நிலமை காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அநியாயமாக பலியாகும் உயிர்பலிகளை தடுத்து மக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு வழி சமைப்பார்களா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள் எனப் பலரும் இந்தப் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் ஊடாக ஆபத்தின் மத்தியில் போக்குவரத்தை மேற்கொள்ளுகின்றன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating