மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 13ம் எண்: அப்படி என்ன தான் உள்ளது அதில்…?

Read Time:3 Minute, 43 Second

13_002உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் 13ம் எண்ணை ராசியற்ற எண்ணாக கருதுகின்றனர்.
உலகளவில் மக்கள் பலருக்கும் 13ம் எண் என்றாலே அச்சம் ஏற்பட்டு விடுகிறது.

பலரையும் அச்சத்தில் ஆழ்த்தும் அளவுக்கு அப்படி என்ன தான் உள்ளது 13ம் எண்ணில்?

13 என்ற எண் ஏன் ராசியில்லாத எண்ணாகவும் அச்சத்தை ஏற்படுத்தும் எண்ணாகவும் உள்ளது என்பதற்கு உறுதியான எந்த காரணமும் இல்லை.

ஆனால் 13ம் எண் பற்றி எண்ணற்ற கதைகளும் காரணங்களும் மக்கள் மத்தியில் உலா வருகிறது.

உலகின் பல மூலைகளில் வாழும் பல்வேறு கலாச்சாரங்களை சேர்ந்த மக்களும் 13ம் எண்ணை ராசியில்லாத எண்ணாக கருதுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

இயேசு அளித்த கடைசி விருந்தில் 13வது நபராக இருந்த Judas என்ற நபர் இயேசுவிற்கு துரோகம் செய்ததால் 13ம் எண் ராசியில்லாத எண் என்று கூறப்படுகிறது.

நாசாவால் நிலாவுக்கு ஆராய்சிக்காக அனுப்பப்பட்ட ’அப்பல்லோ 13’ மட்டும் தான் அந்த வரிசையில் தோல்வியை தழுவிய ஒரே விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் தங்கள் வீட்டு எண் 13 என வந்தால் ஏற்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.

13 என்ற எண்ணிக்கையில் படிக்கட்டுகளோ, மாடிகளோ தங்கள் வீடு அல்லது அலுவலக கட்டிடங்களில் அமைந்து விடக்கூடாது என பலரும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும், 13 மட்டுமல்லாமல் 13-ன் கூட்டுத்தொகையான 4 (1+3=4), என்ற எண்ணையும் ஆசியா உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் கெட்ட சகுனமாக பார்க்கின்றனர்.

13ம் எண் என்றாலே ராசியற்றது என கருதப்படும் நிலையில், அந்த 13ம் திகதி ஓர் வெள்ளிக்கிழமை அன்று வந்தால் அது ஒரு தீயசக்தி படைத்த நாளாக உலக மக்களால் கருதப்படுகிறது.

அதாவது இந்த நாளில், வீட்டை விட்டு வெளியில் செல்லாதிருப்பது, புதிய தொழில் தொடங்காதிருப்பது போன்ற நம்பிக்கைகளை மக்கள் கடைபிடிக்கின்றனர்.

இந்நாளில் இங்கிலாந்தில் எவ்வித வணிகமும் நடைபெறாது, மேலும் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கு என்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் காலங்காலமாக கருதப்பட்டு வருகிறது.

13 என்ற எண்ணின் பின்னால் பல கதைகள் கூறப்பட்டு வந்தாலும், அந்த எண் ராசியற்றதா அல்லது ஆபத்து நிறைந்ததா என்பது தொடர்பான எந்த வித வரலாற்று ரீதியான மற்றும் அறிவியல் ரீதியான காரணங்கள் கண்டறியப்படவில்லை.

13 என்ற எண்ணை அடிப்படையாக வைத்து பல திகில் நாவல்கள், திரைப்படங்கள் என வெளியாகியுள்ளது.

எனவே, உலகம் முழுதும் வாழும் மக்களிடம் 13ம் எண் மீதான காரணமற்ற அச்சம் இயல்பாகவே ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெர்மனியில் பேஸ்புக் அலுவலகம் மீது வெடிகுண்டுகள் வீச்சு: மர்ம கும்பல் தாக்குதல்…!!
Next post கருவில் உள்ள சிசுவிற்கு நடந்த இதய அறுவைச் சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை…!!