பாக். குண்டுவெடிப்புக்கு லஷ்கர்-இ-ஜாங்வி அல்-அலாமி அமைப்பு பொறுப்பேற்பு – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு..!!

Read Time:1 Minute, 36 Second

timthumb (1)பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இன்று நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பழங்குடியினர் பகுதியான குர்ரமில் ஷியா பிரிவினர் அதிகம் இருக்கும் இடத்தை குறிவைத்து இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. பராச்சினார் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் உள்ள கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது ஒரு பையில் வைக்கப்பட்டிருந்த 30 முதல் 35 கிலோ எடைக்கொண்ட குண்டு வெடித்ததில் மொத்தமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு லஷ்கர்-இ-ஜாங்வி அல்-அலாமி என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சிரிய முஸ்லிம்களுக்கு ஈரானும், சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்தும் இழைத்துவரும் கொடுமைகளுக்கு பழிவாங்கும்ஜ் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அர்ஜென்டினாவில் போலீசார் சென்ற பஸ் பாலத்தில் கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலி…!!
Next post தரையிலிருந்து 1312 அடி உயரத்தில் ஹோட்டல்…!!