திருமணமாகி ஏழரை வருடங்களான பின்னரும் கன்னியாக இருந்த பெண்ணுக்கு விவாகரத்து…!!

Read Time:3 Minute, 2 Second

13687Untitled-1திரு­ம­ண­மாகி ஏழரை வரு­டங்­க­ளான பின்­னரும் தான் கன்­னி­யாக இருப்­ப­தாக தெரி­வித்த பெண்­ணொ­ரு­வ­ருக்கு மால்டா நாட்டின் நீதி­மன்­ற­மொன்று விவா­க­ரத்து வழங்­கி­யுள்­ளது.

இப்­பெண்­ணுக்கு 2000 ஆம் ஆண்டு திரு­மணம் நடை­பெற்­றது. ஆனால், இப்­பெண்ணும் அவரின் கண­வரும் ஒரு தட­வை­கூட உட­லு­றவில் ஈடு­ப­ட­வில்லை என நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

இப்­பெண்ணின் கண­வ­ருக்கு பாலி­யலில் எவ்­வித ஆர்­வமும் இல்­லையாம்.

திரு­மணம் முடிந்­த­வுடன் தேனி­ல­வுக்­காக இவர்கள் வெளி­நாட்­டுக்குச் சென்­றனர். தேனி­லவு காலத்­தில்­கூட இவர்கள் நெருங்­கி­யி­ருக்­க­வில்லை.

சில நாட்­க­ளின் பின் இவர்கள் மால்­டா­வுக்கு திரும்­பி­ய­வுடன் தனது மனை­வி­யுடன் ஒரே வீட்டில் தங்­கு­வ­தற்கும் மேற்­படி கணவன் ஆர்வம் காட்­ட­வில்லை.

அவர் தனது தந்தை, தாயுடன் வேறொரு வீட்­டி­லேயே தங்­கி­யி­ருந்தார்.

திரு­ம­ண­மாகி ஏழரை வரு­டங்­க­ளான பின்னர் இப் பெண் விவா­க­ரத்து கோரி நீதி­மன்­றத்தை நாடினார்.

தான் குழந்­தை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு விரும்­பு­வ­தா­கவும் அதற்கு உடல்­ரீ­தி­யாக தகு­தி­யான நிலையில் இருப்­ப­தா­கவும் தெரி­வித்த அப்பெண், மருத்­துவ பரி­சோ­தனை அறிக்­கை­க­ளையும் சமர்ப்­பித்தார்.

எனினும் தன்­னுடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்கு தனது கணவர் விரும்­ப­வில்லை எனவும் அவர் தனது தொழி­லி­லேயே “பிஸி­யாக” இருப்­ப­தா­கவும் அப்பெண் தெரி­வித்தார்.

தனது கண­வ­ருக்­காக தான் எல்­லா­வற்­றையும் செய்­த ­போ­திலும் அவர் தன்னை நேசிக்­க­வில்லை எனவும் தன்னை ஒரு­போதும் எதற்­கா­கவும் பாராட்­ட­வு­மில்லை எனவும் அப்பெண் தெரி­வித்தார்.

இவ்­வ­ழக்கில் சாட்­சி­ய­ம­ளித்த மருத்­துவர் ஒருவர், இத்­தம்­ப­தி­யினர் குழந்தை பெற்­றுக்­கொள்­ளக்­கூடிய உடற்­ த­கு­தி­யுடன் உள்­ள­போ­திலும் அதற்­கேற்ற வகையில் அவர்கள் உடலுறவில் ஈடுபடவில்லை எனத் தெரிவித் தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேற்படி பெண்ணின் கோரிக்கையின்படி விவகாரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரைக் கொலை செய்ய முயற்சித்த மனைவி போலி குறிப்பிலிருந்த எழுத்துப் பிழையினால் சிக்கினார்…!!
Next post பாகிஸ்தான் எல்லையில் பயங்கர குண்டுவெடிப்பு: 15 பேர் பரிதாப பலி…!!