நீர்வீழ்ச்சிக்கு அருகில் இளைஞன், யுவதி சடலமாக மீட்பு…!!

Read Time:1 Minute, 27 Second

393697424Untitled-1எல்பிட்டிய – பிட்டுவ – அடஹேலன நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்து இருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

23 வயதான இளைஞன் மற்றும் 18 வயதான யுவதி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இன்று பகல் குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இரு சடலங்கள் இருப்பது தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதன்போது எல்பிடிய – நவதகல பகுதியைச் சேர்ந்த இருவரே பலியாகியுள்ளதோடு, சடலங்களின் அருகில் இருந்து நச்சு குப்பி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எல்பிடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கில் தொங்கிய ஆணின் சடலம்..!!
Next post ஜனாதிபதி இத்தாலி பயணம்…!!