வேலூர் அருகே பாலாறு-குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி..!!

Read Time:1 Minute, 38 Second

timthumbகாட்பாடி அடுத்த விழுந்தாங்கல் பாறைமேட்டை சேர்ந்தவர் கேசவன், கூலி தொழிலாளி. இவருடைய மகன் வசந்த் (வயது14). காசிகுட்டையில் உள்ள அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான்.

வசந்த் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து மேல்மொணவூர் பாலாற்றில் நேற்று மாலை குளிக்க சென்றான். அங்கு 3 பேரும் குளித்து கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென வசந்த் பாலாற்றில் மூழ்கி விட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பாலாற்றில் குதித்து தேடினர்.

மேலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வசந்தை தேடினர். ஆனால் அவர்களால் வசந்தை பிணமாக தான் மீட்க முடிந்தது.

காட்பாடி தாலுகா காளாம்பட்டு வெள்ளேரி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநாத்(15). 10–ம் வகுப்பு மாணவன் ஸ்ரீநாத் தனது நண்பர்களுடன் லத்தேரி அருகே உள்ள மேல்அத்திக்கட்டு பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டையில் நிரம்பிய தண்ணீரை வேடிக்கை பார்க்க சென்றான். அப்போது குட்டையில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாப்பிடதாததால் தன் தாய் கோவத்திற்கு ஆளான குழந்தை…!!
Next post யாழில் முச்சக்கரவண்டியுடன் ரயில் மோதி கோர விபத்து: சாரதி படுகாயம்..!! (இணைப்பு செய்தி)