ஹெலிகாப்டரில் இருந்து தலைகீழாக விழுந்து பலியான மாணவி: மீட்பு பணியில் நிகழ்ந்த சோகம்…!!

Read Time:2 Minute, 49 Second

girl_died_002ஐயர்லாந்து நாட்டில் 14 வயது மாணவி ஒருவர் மீட்பு ஹெலிகாப்டரில் இருந்து தலைகீழாக விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐயர்லாந்தின் தலைநகரான டப்ளின் நகரை சேர்ந்த Aoife Winterlich என்ற 14 வயது மாணவி ஒருவர் பள்ளியில் சாரணர் பிரிவில் சேர்ந்து சேவைகளை புரிய விரும்பியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிறுக்கிழமை 4 மாணவ, மாணவிகள் அடங்கிய குழு ஒன்று Hook Head கடற்கரை பகுதியில் துப்புரவு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராத சம்பவத்தில் 4 பேரையும் கடல் அலைகள் அடித்துகொண்டு சென்றுள்ளது.

இதில் 2 பேர் போராடி கரையை அடைந்துள்ளனர். ஆனால், 14 வயது மாணவியும் மற்றொரு மாணவரும் கரையை அடைய முடியாமல் கடலில் தத்தளித்துள்ளனர்.

இது குறித்து தகவல் கிடைக்க பெற்ற கடலோர மீட்பு படையினர் ஹெலிகாப்டருடன் அங்கு விரைந்து வந்துள்ளனர்.

கடலில் இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை கண்டு, இருவரையும் ஒரே சமயத்தில் மேலே இழுக்க வேண்டும் என நினைத்து அதற்கான செயலில் இறங்கியுள்ளனர்.

14 வயது மாணவியும், மாண்வரையும் கட்டி மேலே இழுத்தபோது சுமார் 40 அடி உயரத்திற்கு வந்தபோது, எதிர்பாராத வகையில் 14 வயது மாணவி தவறி விழுந்துள்ளார்.

கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அந்த மாணவியை கடல் அலைகள் மீண்டும் கடலுக்குள் இழுத்துச்சென்றுள்ளது.எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த சம்பத்தை தொடர்ந்து மாணவியை உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சுமார் 5 நாட்களாக அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சாரணர் பணியின்போது நிகழ்ந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகம் வருத்தம் தெரிவித்ததுடன், அப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆற்காட்டில் கணவரை பிரிந்த இளம்பெண்ணை கொல்ல முயற்சி செய்த மேஸ்திரி…!!
Next post தொலையுணர்வு திறமை கொண்ட ஐந்து வயது வினோத சிறுவன்: ஆச்சரியத்தில் மருத்துவர்கள் (வீடியோ இணைப்பு)…!!