ஜேர்மனியில் பயங்கரம்: ஆவி புகுந்ததாக கூறி பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்த உறவினர்கள்..!!

Read Time:3 Minute, 4 Second

downloadஜேர்மனி நாட்டில் பெண் ஒருவரின் உடலுக்குள் ஆவி புகுந்துள்ளதாக கூறி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்த உறவினர்கள் 5 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள Frankfurt நகரில் InterContinental என்ற ஹொட்டல் ஒன்று அமைந்துள்ளது.

இந்த ஹொட்டலின் அறை ஒன்றில் சுத்தம் செய்வதற்காக கடந்த சனிக்கிழமை அன்று உள்ளே ஊழியர் ஒருவர் நுழைந்தபோது அங்கு படுகாயங்களுடன் பெண் ஒருவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த விசாரணை தொடர்பாக நேற்று பொலிசார் அறிக்கை ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், உயிரிழந்த 41 வயதான பெண்ணின் உடலுக்குள் தீயசக்தி புகுந்துள்ளதாக கூறி, அவரது உறவினர்கள் 5 பேர் அவரை சித்ரவதை படுத்தியுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று, பெண்ணை ஹொட்டல் அறைக்கு அழைத்து வந்து கட்டிலில் கட்டி போட்டுள்ளனர்.

பின்னர், அவரது வயிற்றிலும், மார்பிலும் ஒவ்வொரு நபராக கடுமையாக தாக்கியுள்ளனர்.

வலியை தாங்க முடியாமல் பெண் கதறி அழும் சத்தம் வெளியே கேட்க கூடாது என்பதால், அந்த பெண்ணின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர்.

இதனால் கடுமையான மூச்சு திணறலுக்கு உள்ளான அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த கொடூரமான சம்பவத்தில் ஈடுப்பட்ட 44 வயதான பெண், அவரது 21 வயதான மகன், 19 வயதான மகள் மற்றும் 15 வயதான இரண்டு சிறுவர்கள் உள்பட 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த இரண்டு சிறுவர்களில் ஒருவன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் என கூறப்படுகிறது.

அதேசமயம், 44 வயதான பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் மேலும் ஒரு பெண்ணை ஒரு இடத்தில் அடைத்து வைத்திருப்பதாக கூறியதை தொடர்ந்து அந்த பெண்ணையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

தென் கொரியா நாட்டை சேர்ந்த இந்த குடும்பத்தினர் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் தொடர் சூறாவளி, மழை: 2 பெண்கள் பலி..!!
Next post தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது சீறி பாய்ந்த ரெயில்: வைரல் வீடியோ..!!