எம்.எஸ். சுப்புலட்சுமி இறந்த தினம்..!!

Read Time:5 Minute, 7 Second

timthumbஎம்.எஸ். சுப்புலட்சுமி (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி) 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. 1998-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். இவர் 2004-ம் அண்டு டிசம்பர் 11-ந்தேதி காலமானார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1816 – இண்டியானா ஐக்கிய அமெரிக்காவின் 19-வது மாநிலமானது.

* 1907 – நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டிடம் தீயில் எரிந்து சாம்பரானது.

* 1917 – பிரித்தானியப் படைகள் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து ஜெருசலேமை மீட்டன.

* 1927 – சீனாவின் குவாங்சூ நகரை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றி அதனை குவாங்சூ சோவியத் என மாற்றியிருப்பதாக அறிவித்தனர்.

* 1931 – ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுக்கு தமது முழுமையான அரசியலமைப்புகளைப் பேணும் சட்டமூலம் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

* 1936 – ஐக்கிய இராச்சியத்தின் மன்னன் எட்டாம் எட்வேர்ட் முடி துறந்தார்.

* 1937 – எஸ்தோனியாத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் ஸ்டாலின் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

* 1941 – இரண்டாம் உலகப்போர்: ஜெர்மனியும் இத்தாலியும் ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தன.

* 1946 – ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது.

* 1958 – அப்பர் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

* 1964 – நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் சே குவேரா உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐ.நா. கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.

* 1972 – அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கியது.

* 1981 – எல் சல்வடோரில் இராணுவத்தினர் நாட்டின் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.

* 1993 – மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உயர்மாடிக் கட்டிடம் ஒன்று வீழ்ந்ததில் 48 பேர் கொல்லப்பட்டனர்.

* 1994 – ரஷ்யாவின் அதிபர் போரிஸ் யெல்ட்சின் தமது படைகளை செச்சினியாவுக்கு அனுப்பினார்.

* 1998 – தாய்லாந்தைச் சேர்ந்த விமானம் வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.

பிரபலமானவர்கள் பிறந்த தினம்:-

* 1781 – சர் டேவிட் ப்ரூஸ்டர், ஸ்காட்லாந்து இயற்பியலாளர். (இ. 1868)

* 1803 – ஹெக்டர் பேர்லியோஸ், பிரெஞ்சு இசையமைப்பாளர் (இ. 1869)

* 1843 – ராபர்ட் கோக், ஜெர்மனிய அறிவியலாளரும் மருத்துவரும் (இ. 1910)

* 1882 – மாக்ஸ் போர்ன், ஜெர்மனிய இயற்பியலாளரும், நோபல் விருதாளரும், (இ. 1970)

* 1890 – மார்க் டோபே, அமெரிக்கப் பண்பியல் வெளிப்பாட்டிய ஓவியர் (இ. 1976)

* 1911 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்தியப் எழுத்தாளர் (இ. 2006)

* 1918 – அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (இ. 2008)

* 1931 – ஓஷோ, இந்திய ஆன்மீகத் தலைவர், (இ. 1990)

* 1935 – பிரணாப் முக்கர்ஜி, இந்திய ஜனாதிபதி * 1951 – பீட்டர் டி. டேனியல்ஸ், மொழியியல் அறிஞர்

* 1954 – பிரசந்தா, நேபாளப் பிரதமர் * 1958 – ரகுவரன், நடிகர் (இ. 2008)

* 1969 – விஸ்வநாதன் ஆனந்த், இந்திய செஸ் ஆட்டக்காரர்

* 1980 – ஆர்யா, தமிழ்த் திரைப்பட நடிகர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமலையில் சடலமாக மீட்கப்பட்டவர் கோயமுத்தூரில் உயிருடன் உள்ளார்..!!
Next post 49 முறை தலைக்கீழாக சுற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ள இளைஞர்..!!