ரஷிய மிருக காட்சி சாலையில் நண்பர்களாக பழகும் புலி–ஆடு…!!

Read Time:2 Minute, 24 Second

17a666ec-d3bc-41b2-9c3e-302b4d25797b_S_secvpfரஷியாவில் விளாடி வோஸ்டாக் என்ற துறைமுக நகரம் உள்ளது. பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள இந்த நகரில் ‘பிரைமோஸ்கி சபாரி’ என்ற மிருக காட்சி சாலை உள்ளது.

இங்கு சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் உள்ளன. இவற்றுக்கு தேவையான உணவு பொருட்கள் உயிருடன் வழங்கப்படுகின்றன. அவற்றை அவை இயற்கையாக வேட்டையாடி சாப்பிடுகின்றன.

இந்த நிலையில் கடந்த மாதம் அங்குள்ள அமூர் என்ற ஆண் சைபீரிய புலிக்கு உணவாக வெள்ளாடுகள் வழங்கப்பட்டன. அவற்றில் ‘திமூர்’ என்ற வெள்ளாட்டை புலி வேட்டையாடி உணவாக்கி கொள்ளவில்லை.

மாறாக அந்த ஆட்டுடன் நண்பனாக பழகியது. ஆடும் பயமின்றி புலியுடன் தோழமையுடன் நட்பு பாராட்டியது. தற்போது அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாகி விட்டனர்.

இருவரும் ஒரே பகுதியில் ஒன்றாக சுற்றித்திரிகின்றனர். ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக தூங்குகின்றன. மேலும் ஓடியாடி, கட்டிப்புரண்டு விளையாடுகின்றன. இது மிருக காட்சி சாலைக்கு வரும் பார்வையாளர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக ஆடுகளை தான் புலிகள் விரும்பி உணவாக சாப்பிடும். தற்போது அந்த ஆட்டுடன் நண்பனாக புலி பழகுகிறது. புலியும், ஆடும் நண்பர்களாக பழகும் காட்சி தற்போது வலை தளங்களில் பரவி உலகம் முழுவதும் அதிசய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆடுகள் புலிகளை பார்த்தால் பயத்தில் நடுங்கி அஞ்சும். ஆனால் இந்த ஆடு புலியை பார்த்து பயப்படாமல் நிமிர்ந்து நிற்கிறது. அதுவே புலியை நண்பனாக்கியுள்ளது என மிருககாட்சி சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹோண்டுராசில் சர்வதேச கால்பந்து வீரர் சுட்டுக்கொலை…!!
Next post அடையாறு அருகே தனியார் பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலி…!!