வடமாகாண சபை உறுப்பினரால் ஏமாற்றப்பட்ட இரு பெண்கள்.. நியாயம் கேட்டு வடமாகாண சபை அலுவலகத்தில் தர்க்கம்..!!
வடமாகாண சபையில் உள்நுழைந்த இரு பெண்களினால் பதற்றநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 40 ஆவது அமர்வு நேற்றைய தினம்(10) கைதடியில் உள்ள அதன் அமைவிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன்போது திடிரென நாவாந்துறை பகுதியை சேர்ந்த இரு பெண்கள் மாகாண சபைபாதுகாப்பு செயற்பாடுகளையும் மீறி எதிர்கட்சி தலைவரை சந்தித்து கதைத்துள்ளனர்.
பின்னர் எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இருந்து சந்திப்பு நிறைவடைந்த பின்னர் வெளியே வந்தபோது அவ்விடத்திற்கு திடிரென வந்த வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் அய்யூப் அப்பெண்களை நோக்கி “ஏன் இங்கே வந்தீர்கள். யார் உங்களை இங்கே அனுப்பியது?” என்ற கேள்விகளை கேட்க தொடங்கினார்.
அப்போது குறித்த இரு பெண்களும் “நாங்களாகவே தான் சபைக்கு வந்ததாகவும் 4 வருடங்களாக எங்களிற்கு நீங்கள்(அஸ்மின்) தரவேண்டிய பணத்தை (ரூபா 80000) தந்திருந்தால் இங்கே வந்திருக்க மாட்டோம்” என அவ்விடத்தில் அழுது கொண்டு நின்றனர்.
உடனடியாக அஸ்மீன் இவ்விரு பெண்களையும் இங்கிருந்து அகன்று செல்லுமாறு கோரியதுடன் “அந்தப்பணம், பள்ளிவாசல் ஒன்று தான் உங்ககளிற்கு தர வேண்டும், நான் அதை நான்கு வருடத்திற்கு முன்னர் பொறுப்பு நின்றேன். அது தான் உண்மை” என அடம்பிடித்தார். ஆனால் “அப்பணத்தை என்னால் இப்போது தர இயலாது” என அவ்விடத்தில் வைத்து கூறிவிட்டார்.
இந்நிலையில் அதை கேள்வியுற்று அழுத குறித்த பெண் “அப்பணம் பள்ளிவாசல் எனக்கு தர வேண்டிய பணமல்ல.., பள்ளிவாசலுக்கும் அதற்கும் தொடர்பில்லை. நீங்கள் என்னை ஏமாற்றி வருகின்றீர்கள். தொலைபேசி அழைப்பு கூட எடுத்தாலும் நீங்கள் அதை எடுக்க மறுக்கின்றீர்கள். உங்களது உறைவிடம் தேடி களைத்து விட்டேன். இந்நிலையில் தான் இச்சபையில் நியாயம் கேட்கலாமே என்று வந்தேன்” என தேம்பி தேம்பி அழுதுவிட்டார்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த குறித்த வட மாகாண சபை உறுப்பினர் தனக்கு துணையாக அங்கு செய்தி சேகரிப்பில் நின்ற ஊடகவியலாளர் ஒருவரை அழைத்து இவ்விரு பெண்களையும் சமாதானப்படுத்தி அனுப்புமாறும் பணத்திற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் கூறியுள்ளார்.
இவ்விடயங்களை சபைக்கு வந்திருந்த பலரும் வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தனர். மற்றைய பக்கம் சபை அமர்வுகள் நடைபெற்ற வண்ணம் இருந்தன.
எனினும் அப்பெண்கள் சபையை விட்டு வெளியேற மறுக்கவே பாதுகாப்பு ஊழியரை அழைத்த மற்றுமொரு உறுப்பினர் (சட்டத்தரணி சயந்தன்) உறுப்பினர் அஸ்மீன் அய்யூப் சார்பாக நடந்து கொண்டதுடன் “ஏன் இப்பெண்களை உள்ளே அனுப்பினீர்கள்?” என பாதுகாப்பு ஊழியரை கடிந்து கொண்டார்.
தொடர்ந்து குறித்த இரு பெண்களை தனி அறைக்கு அழைத்த உறுப்பினர் அஸ்மின் அய்யூப் மேற்குறித்த ஊடகவியலாரையும் சாட்சியாக வைத்து அப்பெண்கள் இருவரையும் பின்னேரம் சந்தித்து உரிய பணத்தை பெற்று தருவதாக கூறி அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிந்திக்கிடைத்த தகவலின் படி மாகாண சபை உறுப்பினர் அவர் தங்கி இருந்த இடங்களில் பல்வேறு பண மோசடிகளை மேற்கொண்டு மறைந்து வாழ்ந்து வருவதாக அங்கிருந்த வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Average Rating