உங்கள் கல்லீரலைச் சுத்தமாக்கி அதன் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவுகள்…!!
பெரும்பாலான மக்களின் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் மற்றும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால், கல்லீரல் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் கல்லீரல் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி, அதன் செயல்பாடு பாதிக்கப்பட்டிருக்கும்.
கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்!!!
ஒருவரின் உடலில் கல்லீரலின் செயல்பாடு குறைந்தால், அவர்கள் தங்கள் உயிருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உலை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். கல்லீரல் பாதிக்கப்படுவதற்கு புகைப்பிடிப்பது, மது அருந்துவது மட்டுமின்றி, தூக்கமின்மையும், அளவுக்கு அதிகமாக ஹோட்டல் உணவுகளை உண்பதும் தான் காரணம். கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த 15 அருமையான வழிகள்!!!
எனவே இப்பழக்கம் இருந்தால், அவர்கள் தங்களின் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒருசில உணவுகளை உட்கொண்டு, கல்லீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயல வேண்டும். இங்கு கல்லீரலைச் சுத்தமாக்கி அதன் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை படித்து முடிந்தால் அன்றாடம் உட்கொண்டு வாருங்கள். கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரிசெய்யும் சில இயற்கை நிவாரணிகள்!!!
வெண்ணெய் பழம்
வெண்ணெய் பழம் கல்லீரலை ப்ரீ ராடிக்கல்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும். மேலும் இப்பழம் கல்லீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும். எனவே முடிந்தால் தினமும் ஒரு டம்ளர் வெண்ணெய் பழ மில்க் ஷேக் குடியுங்கள்.
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளான கீரைகள், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவை மிகவும் சிறப்பான கல்லீரலைச் சுத்தம் செய்ய உதவும் உணவுகள். எனவே இவற்றை வாரத்திற்கு 2-3 முறையாவது உணவில் சேர்த்து வாருங்கள்.
கிரேப் ஃபுரூட்
இப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளதோடு, இது கல்லீரலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றும். மேலும் இப்பழம் உடலின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.
ஆப்பிள்
ஆப்பிள் கூட கல்லீரலை சுத்தமாக்கி, அதன் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவுப் பொருளாகும். எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம்
வெங்காயம், எலுமிச்சை, பெர்ரிப் பழங்கள் மற்றும் தயிர் போன்றவை கல்லீரலில் டாக்ஸின்களால் ஏற்பட்டுள்ள காயங்களைக் குணப்படுத்தும். எனவே இந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உணவில் சேர்த்து கல்லீரலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பராமரியுங்கள்.
பூண்டு
பூண்டும் கல்லீரலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்றி, கல்லீரலில் உள்ள நொதிகளை சுறுசுறுப்புடன் செயல்பட வைத்து பாதுகாக்கும். அதுமட்டுமின்றி பூண்டு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றும்.
பீட்ரூட்
பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்தத்தை சுத்தப்படுத்துவதால், கல்லீரலின் செயல்பாடு மேம்பட்டு, உடலில் ஊட்டச்சத்துக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். மேலும் பீட்ரூட்டில் உள்ள பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து, உடலை சுத்தப்படுத்துவதோடு, அடிக்கடி பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தி, கண்ட உணவுகளால் டாக்ஸின்கள் அதிகரிப்பதைத் தடுக்கும்.
மஞ்சள் தூள்
ஆய்வுகளில் மஞ்சள் தூளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலைச் சுத்தப்படுத்தி, அதன் செயல்பாட்டை அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் நீரில் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து குடித்து வாருங்கள். இதனால் உங்கள் கல்லீரலில் டாக்ஸின்கள் சேர்வதைத் தடுக்கலாம்.
Average Rating