திருமணத்திற்கு சாட்சியாக நடிகை காவேரி “நைட்டி’ * போலீஸ் அதிர்ச்சி
கேமராமேன் வைத்தியுடன் தனக்கு திருமணம் நடந்த அன்று பயன்படுத்திய பட்டுப் புடவை, வைத்தியின் பட்டு வேஷ்டி சட்டை மற்றும் “முதல் இரவில்’ பயன்படுத்திய “நைட்டி’ ஆகியவற்றை நடிகை காவேரி போலீசாரிடம் ஒப்படைத்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவற்றை ரசாயன பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை நெற்குன்றம் மேற்கு முகப்பேரில் அபூர்வா அபார்ட்மென்ட் வீட்டில் நடிகை காவேரி(35) வசித்து வருகிறார். நடிகை காவேரி 99ம் ஆண்டு “டிவி’ தொடரில் நடித்தார். அத்தொடரில் கேமரா மேனாக வைத்தி பணியாற்றினார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நடிகை காவேரி போலீசில், “2003ம் ஆண்டு முதல் வைத்தியும் நானும் காதலித்து வருகிறோம். இந்தாண்டு அக்டோபர் 29ம் தேதி எனது வீட்டில் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தில் எனது நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்’ என போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நொளம்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ், நடிகை விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அபார்ட்மென்ட் குடியிருப்பின் தலைவர், வாட்ச்மேன், குடியிருப்பின் பராமரிப்பு மேலாளர், நடிகை குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் உட்பட எட்டு பேரிடம் போலீசார் விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில், இரண்டு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. “திருமணத்தை நேரடியாக பார்த்தோம்’ என நடிகையின் உறவினர்களை தவிர, அவருக்கு அறிமுகமில்லாதவர்கள் யாரும் இதுவரை சாட்சியளிக்க முன்வரவில்லை. அதனால் போலீசாருக்கு “ஐ விட்னஸ்’ கிடைக்கவில்லை.
சில வழக்குகளில், இந்த சாட்சியம் இல்லாத பட்சத்தில், மற்றொரு சாட்சியான “சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியங்களை’ போலீசார் ஏற்றுக் கொள்வர். அபார்ட்மென்ட்டில் குடியிருப்பவர்கள், “நடிகை காவேரியும், வைத்தியும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். திருமணம் செய்து கொண்ட பின்பு புது உடையுடன் எங்கள் வீட்டிற்கு வந்தனர். வீட்டில் இருந்த பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்’ என நடிகைக்கும், வைத்திக்கும் தொடர்பில்லாத எட்டு பேர் போலீசாரிடம் சாட்சியம் அளித்துள்ளனர்.
நடிகைக்கும், வைத்திக்கும் உறவினர்கள் இல்லாத இந்த சாட்சியங்கள் கோர்ட்டில் ஏற்றுக் கொள்ளப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதனால், போலீசாரை பொருத்தவரை இந்த வழக்கு நுõறு சதவீதம் உண்மை என கூறப்படுகிறது.
இந்த சாட்சியங்களை தவிர நடிகை காவேரி திருமணம் நடந்த அன்று பயன்படுத்திய பட்டுப் புடவை, வைத்தியின் பட்டு வேஷ்டி சட்டை மற்றும் “முதல் இரவில்’ பயன்படுத்திய “நைட்டி’ போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றை ரசாயன பரிசோதனைக்கு நாளை அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். அதே போல் வைத்தி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டுள்ளார். “ஜாமீன் அளிக்க கூடாது’ என போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
வைத்திக்கு முன்ஜாமீன் கிடைத்தாலோ அல்லது கோர்ட்டில் சரண் அடைந்தாலோ வழக்கின் புலன் விசாரணை அதிகாரியின் முன்பு கட்டாயம் ஆஜராக வேண்டும். அப்போது வைத்திக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஒரு புறம் மருத்துவ சோதனை, மற்றொரு புறம் ரசாயன சோதனையில் வைத்தி சிக்கியுள்ளார். இது தவிர போலீசாரின் கையில் உள்ள திருமண உடைகளை பார்த்த சாட்சிகள், “இந்த உடைகளை வைத்தியும், காவேரியும் அணிந்திருந்ததை பார்த்தோம்’ என கூறியுள்ளனர். இவற்றால் போலீசாரிடம் வைத்தி வசமாக சிக்கியுள்ளார்.