ஆசிட் வீச்சில் காயமடைந்தவர்களுக்கு மாநில அரசுகள் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!

Read Time:1 Minute, 57 Second

timthumb (1)ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு, இழப்பீடு மற்றும் இலவச சிகிச்சை தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை ஏற்படுத்துமாறு மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பரிவர்த்தன் கேந்திரா என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

பல மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க மறுத்து வருவதாகவும் அந்த பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவின்மீது விசாரணை நடத்திவந்த நீதியரசர்கள் எம்.ஒய்.இக்பால் மற்றும் சி.நாகப்பன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

ஆசிட் வீச்சில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காகவும் தங்களால் இயன்ற உதவிகளை அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செய்துதர வேண்டும் என இன்றைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாவகர்…!!! -நோர்வே நக்கீரா (இது எப்படி இருக்கு?)
Next post திருநாவலூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது பஸ் மோதி விபத்து: 3 பேர் பலி..!!