தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க மக்களிடையே உரையாற்றுகிறார் ஒபாமா…!!

Read Time:2 Minute, 30 Second

a3f4fbc5-650f-49ed-a5fd-4248d09c30cc_S_secvpfபாரிஸ் மற்றும் கலிபோர்னியா தாக்குதல்களை அடுத்து, தீவிரவாதத்தை கண்டு அமெரிக்க மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று ஓவல் அலுவலக உரையில் அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 13-ம் தேதி ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகினையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஐ.எஸ் ஆதரவு பாகிஸ்தான் தம்பதியினர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தில் 14 மாற்றுத்திறனாளி சேவகர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் இந்த சம்பத்திற்கு ஐ.எஸ் ஆதரவாளர்கள் சிலர் டுவிட்டர் மூலம் ஆதரவு தெரிவித்ததோடு, சிரியாவில் முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வரும் அமெரிக்காவிற்கும் பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது அமெரிக்க மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று பேச உள்ளார். மிகவும் அரிதான இந்த உரையில் தீவிரவாதத்தை கண்டு அமெரிக்க மக்கள் அச்சம் கொள்ள வேண்டாமென வலியுறுத்துவார் என்றும், ஐ.எஸ் தீவிரவாதிகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் அதிபர் பராக் ஒபாமா பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க மக்களின் பாதுகாப்பிற்கு அரசு கொடுத்து வரும் முக்கியத்தும் குறித்து ஒபாமா உரையாற்றுவார் என்று அட்டர்னி ஜெனரல் லாரெட்டா லிஞ்ச் கூறியுள்ளார். மேலும் துப்பாக்கி உரிம சட்டம் குறித்து தமது உரையில் ஒபாமா பேசுவார் என்றும் லிஞ்ச் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுபோதையில் கப்பலை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய மாலுமி…!!
Next post தற்கொலைப் படைத் தாக்குதலில் ஏமன் ஆளுநர் பலி: ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு..!!