புட்டப்பர்த்தியில் தீவிரவாதி கைது: சாய்பாபா ஆசிரமத்தை தகர்க்க சதியா?

Read Time:2 Minute, 54 Second

ஆந்திர மாநிலம் அனந்த புரம் மாவட்டம் புட்டப் பர்த்தியில் சாய்பாபா ஆசிரமம் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டைச் சேர்ந்த வர்களும் இந்த ஆசிரமத்தில் தங்கி இருந்து சாய்பாபாவை தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் சாய்பாபா ஆசிரமம் அருகே உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத் துவமனை அருகே தீவிரவாதி ஒருவனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசா ரணையில் அவன் ஐதரா பாத்தை சேர்ந்த பந்தர் சையத்சகீல் அகமது என்பது தெரிய வந்தது. மேலும் அவன் போலீசாரிடம் கூறிய தாவது:- கடந்த 18-ந்தேதி நான் ஐதராபாத்தில் இருந்து அனந்த புரம் சென்றேன். பின்னர் அங்கிருந்து 22-ந்தேதி காரில் புட்டபர்த்திக்கு சென்றேன். ஆசிரமத்தில் உள்ள விடுதியில் இடம் கிடைக்காததால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத் துவ மனை அருகே உள்ள நோயாளிகள் விடுதியில் தங்கினேன். நான் ஆசிரமத்தை தகர்க்கும் எண்ணத்தில் வர வில்லை. இவ்வாறு அவன் கூறினான். கைதான தீவிரவாதி ஷகீல்அகமதுவிடம் இருந்து சாய்பாபா ஆசிரமம் மேப் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவன் தங்கிய விடுதிகளில் நடத்திய விசாரணையில் அவன் வெவ்வேறு பெயர்களில் தங்கி இருந்தது தெரிய வந்தது. அவன் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்த சதி திட்டம் தீட்டுவதற்கு புட்டப்பர்த்திக்கு வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவன் ஆசிரமம் பகுதியில் 2 நாட்கள் சுற்றித்திரிந்து கொண்டிருந்ததை ஆசிரம ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். இதையடுத்து அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது. “தீவிரவாதி ஷகீல் அகமது மீது ஐதராபாத் ஓல்டு சிட்டி போலீஸ் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவனுக்கு எந்த தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என்பது பற்றி விசாரித்து வருகிறோம்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஒரே ஆண்டில் சவுதி அரேபியாவில் 203 இந்தியர் தற்கொலை
Next post வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி; புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்